மனைவியை விட்டுச் செல்பவர்.. சுயநலச் செயல்கள் பூமராங் போல திரும்பத் தாக்கும்: குஷ்பு பதிவு வைரல்

குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் குடும்பத் தலைவன் பற்றி கருத்து பதிவிட்டுள்ளது வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.

குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் குடும்பத் தலைவன் பற்றி கருத்து பதிவிட்டுள்ளது வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kushboo

நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி உள்ளது. சினிமா, அரசியல் என 2 துறைகளிலும் குஷ்பு பயணித்து வருகிறார். இந்த நிலையில், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குடும்பத் தலைவன் பற்றி கருத்து பதிவிட்டுள்ளார்.  

Advertisment

அதில்,   “ஒரு உண்மையான மனிதன் எல்லாவற்றுக்கும் மேலாக தன் குடும்பத்தை பார்க்கிறான். அவன் தனது தேவை, ஆசை, விருப்பம் மற்றும் சுதந்திரம் என அனைத்தையும் தன் குடும்பத்தின் முன் இரண்டாம் பட்சமாகத்தான் வைப்பான். வாழ்க்கையில் ஒவ்வொரு திருமணத்திலும் ஏற்ற தாழ்வுகள் வரும், தவறுகள் நடக்கும். ஆனால் இந்த தவறுகள் ஒரு மனிதனுக்கு அவன் பல ஆண்டுகளாக பாதுகாத்த வாழ்க்கையை கைவிடவைக்க தோன்றாது. 

உறவுகளில் காதல் சில நேரங்கள் குறையலாம். ஆனால் மரியாதை குறையாமல் இருக்க வேண்டும். தன் குழந்தைகளை அன்போடு பார்த்துக் கொள்ளும் மனைவியை மதிப்பவன்தான் உண்மையான மனிதன். அப்படி நடந்து கொள்ளாதவன் சுயநலவாதி. இது போன்ற செயல் புரிதல் இல்லாமல் இருப்பதை பிரதிபலிக்கிறது. வாழ்க்கை என்பது ஒரு சுழற்சி. 

சுயநலத்தால் ஒருவர் செய்யும் செயல்கள் பூமராங் போல அவரையே திரும்பத் தாக்கும். அதை எல்லாம் தவறு என உணரும் தருணத்தில் காலம் கடந்து போயிருக்கும். இதுதான் கசப்பான உண்மை. குழந்தையின் தாயை மதிக்க வேண்டும் என்பது அடிப்படை மரியாதை, இது இல்லாமல், ஒரு மனிதன் மற்றவர்களின் மரியாதையை பெறவோ அல்லது வாழ்க்கையில் வெற்றிபெறவோ முடியாது. 

Advertisment
Advertisements

உண்மையான ஆண் முதலில் தன் குடும்பத்தை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் பெர்ஃபெக்டாக இருக்காது. ஆனால் மரியாதை இருந்தால் எல்லாவற்றையும் சமாளிக்கலாம். நமக்காக இருப்பவர்களை மதிப்பது, நம் உலகமாக இருக்கும் குடும்பத்தை கொண்டாடுவது தான் உண்மையான ஸ்ட்ரென்த்.

மரியாதை கொடுத்து பெற வேண்டும். அது வீட்டில் இருந்து துவங்க வேண்டும். இந்த அடிப்படை உண்மையை தவிர்க்கும் மனிதன் அன்பையும் தாண்டி பலவற்றை இழந்ததை உணர்வான்" என்று பதிவிட்டுள்ளார்.  

சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். ஆனால் ஆர்த்தி இதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது, ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் குஷ்புவின் இந்த பதிவு மறைமுகமாக ஜெயம் ரவியை குறிப்பிடுவதாக ரசிகர்கள் உள்பட இணையவாதிகள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: