குஷ்புவிற்கு அறுவை சிகிச்சை: அப்பல்லோ மருத்துவமனை தகவல்

குஷ்புவிற்கு முதுகு தண்டுவடப் பகுதியில் கடுமையான வலி இருந்த நிலையில் அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குஷ்புவிற்கு முதுகு தண்டுவடப் பகுதியில் கடுமையான வலி இருந்த நிலையில் அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Khushbu

பா.ஜ.க பிரமுகரும் நடிகையுமான குஷ்பு

நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ட்விட் பதிவிட்டுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தார். அவர் நடித்த படங்கள், பாடல்கள் இன்றும் ரசிக்கப்படுகிறது. கடந்த 1 வருடத்திற்கு முன் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

குஷ்பு சினிமாவில் நடித்தாலும் அரசியலிலும் ஈடுபட்டார். தற்போது பா.ஜ.க இணைந்த குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான உள்ளார். இந்நிலையில் குஷ்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisment
Advertisements

இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "முதுகு தண்டுவடப் பிரச்சனை காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏற்கெனவே இதே பிரச்சனையால் கடந்த ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கையில் ட்ரிப்ஸ் ஏறியபடி சிசிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட்டு, மருத்துவர்களின் முறையான சிகிச்சைக்கு பின்னர் முழுமையாக குணமடையும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குஷ்புவிற்கு முதுகு தண்டுவடப் பகுதியில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kushboo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: