scorecardresearch

இன்னொரு பொண்ணு கூட காஃபி ஷாப் போனது பிரச்னை… சாந்தனு- கிகி பிரேக் அப் ஸ்டோரி

நான் சுத்தி சுத்தி பாக்குறேன், பாத்தா இவுங்க ஃபிரெண்ட் யாரோ போன் பண்ணி உன் பாய் ஃபிரெண்ட் இங்க வேற யாரோ பொண்ணோட உட்காந்துட்டு இருக்கானு பத்த வச்சுட்டாங்க.

Kiki Shanthanu
Kiki Shanthanu

சாந்தனு நடிப்பில் இராவண கோட்டம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ’மதயானைக்கூட்டம்’ படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற விக்ரம் சுகுமாரன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், சாந்தனு தன் காதல் மனைவி கிகி உடன் இணைந்து கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது காதலிக்கும் போது இருவருக்கும் பிரேக் அப் ஆன கதையை சாந்தனு பகிர்ந்து கொண்டார்.

சாந்தனு பேசுகையில்; கிகி, நானும் லவ் பண்ணும் போது சண்டை போட்டு ரெண்டு நாள் பேசல, அப்போ என்னோட ஒரு ஃபிரெண்ட் மீட் பண்ணேன்.

நான் வெளியே போயிருந்தேன், அந்த இடத்துக்கு அவுங்களும் வந்தாங்க, அப்படிதான் கேஷூவலா மீட் பண்ணோம். பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சேன்னு நின்னு பேசிட்டு இருந்தோம்.

அப்போ நம்ம ஒரு நாள் காஃபி சாப்பிட மீட் பண்ணலாம் கேட்டாங்க, நானும் இதுல என்ன இருக்கு, ஒகேன்னு சொல்லிட்டேன். அப்புறம் தான் நம்ம வேற லவ் பண்றோம், கேர்ள் ஃபிரெண்ட் கிட்ட சண்டை போட்டுருக்கோம், பேசிக்காம வேற இருக்கோம். இந்த டைம்ல வேறொரு பொண்ணுக்கூட வெளியே போனோம்னா அந்த பொண்ணுக்கு எப்படி இருக்கும்? அது தப்பா தெரியும்னு நான் சொல்லாம போயிட்டேன்.

எல்லாம் நல்லாதான் போயிட்டு இருந்தது, திடீர்னு கிகி ஃபோன் பண்ணா.

எப்படிடா மோப்பம் பிடிச்சா, மாட்டிக்கிட்டேன்னு, நான் போன் எடுத்தேன். எங்க இருக்கன்னு கேட்டா, நான் அப்பாவோட மூவி டிஸ்கஷன்ல இருக்கேன்னு சொல்லிட்டேன், இந்த காஃபி ஷாப்ல தான் உங்க டிஸ்கஷன் நடக்குதான்னு கேட்டா.

நான் சுத்தி சுத்தி பாக்குறேன், பாத்தா இவுங்க ஃபிரெண்ட் யாரோ போன் பண்ணி உன் பாய் ஃபிரெண்ட் இங்க வேற யாரோ பொண்ணோட உட்காந்துட்டு இருக்கானு பத்த வச்சுட்டாங்க.

அந்த கேரெக்டரை நான் என் வாழ்க்கையில மறக்க மாட்டேன். அன்னைக்கு பிரேக் ஆனதுதான் அதுக்கப்புறம் நாங்க மறுபடியும் சேர எட்டு வருஷம் ஆயிடுச்சு.

அப்புறம் எட்டு வருஷம் கழிச்சு நாங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து ஆடுறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. அந்த டான்ஸ் ஆடும் போதுதான், கிகி, அவுங்க கஸின்ஸ் எல்லாம் சேர்ந்து பிளான் பண்ணி பயங்கரமா கமல் சாங்க்ஸா போட்டு விட்டாங்க, அந்த பாட்டுக்கெல்லாம் டான்ஸ் ஆடி திரும்ப பழைய நெருப்பு மறுபடியும் பத்திக்கிச்சு என்று தன் காதல் கதையை பகிர்ந்து கொண்டார் சாந்தனு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Kiki vijay shanthnu love story raavana kottam

Best of Express