/indian-express-tamil/media/media_files/2025/08/11/king-kong-family-meet-vijay-sethupathi-video-tamil-news-2025-08-11-18-25-24.jpg)
நடிகர் கிங்காங் மற்றும் அவரது மகள், மருமகன் ஆகியோர் விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு சென்ற நிலையில், மணமக்களை நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தமிழ் சினிமாவில் பல திறமைகளை உள்ளடக்கிய நடிகராக வலம் வருபவர் கிங்காங். இவரின் இயற்பெறர் சங்கர். 13 வயது முதல் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களை மகிழ்வித்து வந்த இவர், 1988-ம் ஆண்டு வெளிவந்த ஊரை தெரிஞ்சிக்கிட்டேன் படத்தில் அறிமுகம் ஆனார். தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு, இந்தி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
தெலுங்கில் ராஜா விக்ரமா என்ற படத்தில் சிரஞ்சீவி, கன்னடத்தில் குண்டுகாளி என்ற படத்தில் சிவராஜ்குமார், இந்தியில் பாவி நம்பர் ஒன் படத்தில் சல்மான்கான், சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கான் உள்ளிட்ட இந்திய சினிமாவில் 4 சூப்பர் ஸ்டார்களுடன் இவர் நடித்து அசத்தி இருக்கிறார். இதனிடையே நடிகர் கிங்காங் கலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் கிங்காங்-கின் மகள் கீர்த்தனாவின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சி என்றால் அது நடிகர் கிங்காங்கின் மகள் திருமணம் தான் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. திரையுலகமே திரும்பி பார்க்கும் வகையில் நடைபெற்ற இந்த திருமணத்தில், பிரபல நடிகர்கள் ஒருசிலர் பங்கேற்றிருந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சர்ப்ரைஸ என்ட்ரியாக வந்து மணமக்களை வாழ்த்தி சென்றார்.
தற்போது பல நடிகர்கள் அவரது வீட்டுக்கு வந்து மணமக்களை சந்தித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் நேரடியாக கிங்காங் வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த நிலையில், நடிகர் கிங்காங் மற்றும் அவரது மகள், மருமகன் ஆகியோர் விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
இன்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் அலுவலகத்தில் சந்தித்து மணமக்களை வாழ்த்தினார் pic.twitter.com/oHVNNwwcjQ
— 👑Actor KingKong👑 (@actorkingkong) August 10, 2025
அங்கு மணமக்களை நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோவை கிங்காங் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.