/indian-express-tamil/media/media_files/2025/08/25/kingdom-ott-release-date-vijay-deverakonda-action-film-to-stream-netflix-tamil-news-2025-08-25-17-54-19.jpg)
விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ திரைப்படம் வரும் 27 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான திரைப்படம் கிங்டம். இத்திரைப்படம் கடந்த மாதம் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்நிலையில், கிங்டம் படத்தில் இலங்கை தமிழர்களை கொடியவர்கள் போன்று சித்தரித்து காட்சிகள் உள்ளதாலும், தமிழ் கடவுளான முருகன் பெயரை வில்லனுக்கு சூட்டி இருப்பதாலும் இப்படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ் ஈழ பிரச்சினை குறித்து அவதூறு காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், ‘கிங்டம்’ திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என சீமான் அறிவித்தார்.
இதையடுத்து, கிங்டம் படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் முன்பாக நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுனர். குறிப்பாக, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திரையரங்கம் சார்பாக வைக்கப்பட்ட கிங்டம் படத்தின் பிளக்ஸ் மற்றும் பேனர்கள் கிழிக்கப்பட்டது.
தொடர்ந்து, 'கிங்டம்' பட நிறுவனம் தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவித்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "கிங்டம் படத்தின் சில காட்சிகள் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக அறிந்தோம். படத்தின் கதை முற்றிலும் கற்பனையானது என உறுதியளிக்கிறோம். தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். இதையும் மீறி மக்களின் உணர்வுகள் ஏதேனும் புண்பட்டு இருந்தால் மிகவும் வருந்துகிறோம்" என்று தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கிங்டம் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி பட நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், 'கிங்டம்' படம் திரையிட இடையூறு செய்தால், திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், சென்சார் சான்று வழங்கப்பட்ட பிறகு படம் திரையிடப்படுவதை யாரும் தடுக்க முடியாது என்றும், அதே நேரத்தில் உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சிக்கு உரிமை உள்ளது என்றும் தெரிவித்தது. இதையடுத்து, கிங்டம் படம் எந்தவித சச்சரவும் இன்றி ஓடியது.
ஓ.டி.டி ரிலீஸ்
இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ திரைப்படம் வரும் 27 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. மேலும், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் படத்தில் கூடுதலாக காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் நாக வம்சி திரையரங்கில் வெளியான படத்தில் ஒரு பாடலும், ஒரு சண்டைக் காட்சியும் நீக்கப்பட்டதாக மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார்.
#Kingdom (Telugu) streaming from August 27 on Netflix in Telugu, Tamil, Kannada, Malayalam and as #Saamrajya in Hindi 🍿!!#OTT_Trackerspic.twitter.com/sv6W9uyP9G
— OTT Trackers (@OTT_Trackers) August 25, 2025
இயக்குனர் கௌதம் தின்னனுரி, "ஹ்ருதயம் லோபாலா" என்ற காதல் பாடல் மற்றும் திருவிழாவில் நடைபெறும் சண்டைக் காட்சி ஆகிய இரண்டும் தொடக்கத்தில் வெளியான டிரெய்லர்களில் காட்டப்பட்டு இருந்தது. தற்போது அவை நெட்ஃபிளிக்ஸ் வெளியாகும் படத்தில் மீண்டும் சேர்க்கப்படலாம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஆதரவு அதிகரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.