நடிகை கிரண் மற்றும் வனிதா விஜயகுமார் இருவரும் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் தீவிரமாக பரவி வருகின்றன. நடிகை வனிதா விஜயகுமார் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கிரணை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு அதிகம் பெயர் போன நடிகைகள் ஒன்றாக சேர்ந்துவிட்டார்களே என ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். புதிய படத்துக்காக இருவரும் இணைந்துள்ளனரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. ஆனால், நடிகை வனிதா விஜயகுமார் நண்பர்கள் என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/06/XNG4cNOoGpEbDQVKbZKW.png)
சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், கோவாவில் செட்டிலான கிரண் வீடியோ சாட் செயலி மூலம் ரசிகர்களுக்கு பிரைவேட் விருந்து வைத்து பணம் சம்பாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
/indian-express-tamil/media/media_files/2025/04/06/PXjaUwznJezs3t3QBEcG.png)
வனிதா விஜயகுமார் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், கிரணை தனது படத்தில் நடிக்க வைக்கப் போகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் இருவரும் சந்தித்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. கவர்ச்சி புயலாக இருக்கும் கிரணையும் வனிதா விஜயகுமாரையும் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.