அமைச்சர் உதயநிதியின் மனைவி கிருத்திகா ட்விட்டரில் பதிவிட்ட கருத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். இதற்கு பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் வந்தன. விமர்சனங்களுக்கு எனது செயல் பதில் அளிக்கும் என்று கூறினார் உதயநிதி. மேலும் இனி படங்களில் நடைக்க போவதில்லை என்றும் முழு நேரம் அரசியலில்தான் செயல்படுவேன் என்றும் அவர் கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு உதயநிதி மகன் இன்பநிதி, அவர் தோழியுடன் இருப்பதுபோல புகைப்படம் வெளியானது. மேலும் அதில் இருப்பது இன்பநிதி இல்லை என்றும் அது பொய்யான புகைப்படம் என்று கருத்துக்கள் வெளியானது.
இந்நிலையில் உதயநிதி மகனை வைத்து பேசுவது சரியான செயல் இல்லை, அவரது தனிப்பட்ட வாழ்க்கை எதற்கு இப்போது பேச வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்பநிதி தாயார் கிருத்திகா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். “காதல் செய்வதற்கும் அதை வெளிப்படுத்துவதற்கும் அச்சப்பட வேண்டாம். இயற்கையை புரிந்துகொள்வதற்கான ஒரு அருமையான வழி காதல்” என்று பதிவிட்டுள்ளார். இதுபோல ஒரு ஆக்கப்பூர்வமான பதிவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் இதுதான் சரியான வளர்ப்பு முறை என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.