கிருத்திகா உதயநிதியின் வித்தியாசம் கை கொடுத்ததா? பேப்பர் ராக்கெட் விமர்சனம்

தந்தை உயிருடன் இருக்கும்போது அவரிடம் செல்லாமல் அவர் இறந்த பின்பு அவருடன் இல்லாததை நினைத்து வருத்தப்படும் காளிதாஸ் சிறப்பாக நடிப்பை கொடுத்துள்ளார்

தந்தை உயிருடன் இருக்கும்போது அவரிடம் செல்லாமல் அவர் இறந்த பின்பு அவருடன் இல்லாததை நினைத்து வருத்தப்படும் காளிதாஸ் சிறப்பாக நடிப்பை கொடுத்துள்ளார்

author-image
WebDesk
New Update
கிருத்திகா உதயநிதியின் வித்தியாசம் கை கொடுத்ததா? பேப்பர் ராக்கெட் விமர்சனம்

2013-ல் வணக்கம் சென்னை, அடுத்த 5 வருடங்களுக்கு பிறகு காளி என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த கிருத்திக்கா உதயநிதி தற்போது 4 வருட இடைவெளிக்கு பிறகு பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரின் மூலம் ரீ என்டரி கொடுத்துள்ளார். காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், கருணாகரன், ரேணுகா, பூர்ணிமா பக்யாராஜ் காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த பேப்பர் ராக்கெட் எப்படி உள்ளது?

Advertisment

அப்பாவின் கடைசி காலத்தில் அவருடன் இல்லாமல் பிஸினசே கதி என்று இருக்கும் நாயகன் காளிதாஸ் ஜெயராம், ஒரு கட்டத்தில் அப்பா இறந்தவுடன் அவருடன் இருக்க முடியவில்லையே என்ன ஏக்கம் அவருக்கு மன அழுத்தத்தை கொடுக்கிறது. இதில் இருந்து விடுபட மருத்துவரான பூர்ணிமா பாக்யராஜை சந்திக்கிறார்

அவரிடம் சிகிச்சை பெற்று வரும், காளிதாஸ் ஜெயராம்-க்கு இவருக்கு முன்பாகவே அங்கு சிகிச்சைக்கு வந்த தன்யா ரவிச்சந்திரன். ரேணுகா, கருணாகரன். நிர்மல் பாலாஜி, கௌரி கிஷன் ஆகியோருடன் பழக்கம் ஏற்படுகிறது. இதில் அனைவருமே ஒரு வித மன அழுத்தத்தில் இருப்பதால். இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒரு ட்ரிப் செல்கின்றனர். இந்த ட்ரிப்பில் என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யகும் குறையாமல் சொன்ன கதைதான் பேப்பர் ராக்கெட்.

ஒடிடி தளங்கள் வந்ததில் இருந்து பெரும்பாலும் த்ரில்லர் கதையம்சம் கொண்ட வெப் தொடர்கள் வெளியாகி வரும் இந்த வேளையில் அதில் இருந்து விலகி முற்றிலும் வித்தியாசமான ஒரு கதைக்களத்தை தேர்வு செய்த கிருத்திகா உயநிதிக்கு பாராட்டுக்கள். தந்தை உயிருடன் இருக்கும்போது அவரிடம் செல்லாமல் அவர் இறந்த பின்பு அவருடன் இல்லாததை நினைத்து வருத்தப்படும் காளிதாஸ் சிறப்பாக நடிப்பை கொடுத்துள்ளார்

Advertisment
Advertisements

தனது காதலனை கொலை செய்ய முயன்ற வழக்கில் சிக்கிய தன்யா ரவிச்சந்திரன், ஏற்கனவே இரண்டுமுறை தற்கொலை முயற்சி செய்து தோல்வியடைந்த கருணாகரன், கால்களை இழந்த நீச்சல் வீராங்கனை கௌரி கிஷன், மார்பக புற்றுநோய் ரேணுகா, பிரைன் டியூமர் நிர்மல். என 5 பேரும் தனித்தனி பிரச்சினையில் சிக்கியிருப்பதும் அதற்கு இறுதியில் சரியான தீர்வை கொடுத்திருப்பதும் கிருத்திகா உதயநிதி சரியாக கையாண்டுள்ளார்.

ஒரு சில இடங்களில், நாடகத்தன்மை மற்றும் சீரியல் பார்க்கும் உணர்வை கொடுத்தாலும், ஒரு எபிசோடு முடிந்தால், அடுத்த எபிசோட்டை உடனடியாக பார்த்தே ஆக வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியதில் பேப்பர் ராக்கெட் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை த்ரில்லர் வெப் தொடர்களையே ஒடிடி தளத்தில் பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த பேப்பர் ராக்கெட் புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: