Kolkata Durga Puja pandal features life-size statue of Sonu Sood, migrant workers : கொரோனா காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போதுமான போக்குவரத்து வசதிகள் ஏதும் இல்லாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மாநிலங்களிலேயே சிக்கி தவித்தனர். இவர்களுக்கு உதவும் வகையில் பாலிவுட் நடிகர் பல்வேறு உதவிகளை தனி மனிதனாக செய்து வருகிறார். இவரின் இந்த உதவிகள் மக்கள் மத்தியில் இவருக்கு மிகவும் நல்ல பெயரை வழங்கி வந்தது.
My biggest award ever ???? https://t.co/4hOUeVh2wN
— sonu sood (@SonuSood) October 21, 2020
பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்த புலம் பெயர் தொழிலாளர்களை தனியாக பேருந்து மற்றும் விமானம் மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். மேற்கு வங்கத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் துர்கா பூஜையின் ஒரு பகுதியாக சோனு சூட் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவிகளை வழங்கும் காட்சியை சிலையாக வடித்து வைத்துள்ளனர்.
இந்த சிலைகள், அம்மக்கள் நடிகர் மீது வைத்திருக்கும் நன்மதிப்பை வெளிப்படுத்தியுள்ளது. பலர் மனதிலும் ஒரு தெய்வதிற்கு நிகராக இவர் வைத்து கொண்டாடப்படுவதன் பிரதிபலிப்பாக இந்த சிலைகள் இருக்கிறது என்று பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil