நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜனின் ’ஆண்பாவம்’ படத்தின் மூலம் நடிப்பைத் தொடங்கிய, பிரபல நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி இரு தினங்களுக்கு முன்பு விபத்து ஒன்றை சந்தித்தார்.
1993-ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற இவர் ஆண் பாவம், ஆயுசு நூறு, ஏட்டிக்கி போட்டி, கோபால கோபாலா உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நாட்டுபுற பாடல்களைத் தவிர்த்து, இசைஞானி இளையராஜா, கங்கை அமரன் மற்றும் வித்யாசாகர் இசையில் திரைப்பட பாடல்களையும் பாடியுள்ளார்.
80 வயதான பாடகி கொல்லங்குடி கருப்பாயி சாலையைக் கடக்கும்போது இரு சக்கர வாகனத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் சிறு காயங்களும், இடது காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் காரைக்குடியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வறுமையில் வாடும் இவர், முதியோர் மற்றும் ஓய்வு பெற்ற நடிகர்களுக்கு அரசாங்கம் வழங்கும் 1500 ரூபாயுடன் உதவித்தொகையில் தான் வாழ்ந்து வருகிறார். தவிர அகில இந்திய வானொலியில் 30 ஆண்டுகள் பணியாற்றிய கொல்லங்குடி கருப்பாயி, தனது கணவரின் மறைவுக்குப் பிறகு பாடுவதை நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”