Advertisment
Presenting Partner
Desktop GIF

நயன்தாரா சர்ச்சை: ராதாரவிக்கு பெருகும் திரைத்துறையினரின் கண்டனங்கள்

உங்கள் பெயரிலும் ஒரு பெண் பெயர் சேர்ந்திருப்பதால் அந்தப் பெயரை நீக்கிவிட்டு, வெறும் ரவி என  வைத்துக் கொள்ளுங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Radha Ravi about Nayanthara

நடிகை நயன்தாராவைப் பற்றி நடிகர் ராதாரவி கொச்சையாகப் பேசியிருப்பதற்கு சமூக வலைதளங்களில் திரைத்துறையினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisment

”கும்பிடும்படி இருப்பவர்களும், கூப்பிடும்படி இருப்பவர்களும் சீதாவாக நடிக்கிறார்கள்” என ராதாரவி பேசியது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இதற்கு திரைத்துறையினர் பலரும் கொதித்தெழுந்துள்ளனர். அவர்கள் ராதாரவிக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

”ராதா ரவி அவர்களே, நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இருக்கும் நான், சமீபத்தில் பெண்களை பற்றி நீங்கள் இழிவாகப் பேசியதற்காகவும், உங்களது முட்டாள்தனத்திற்காகவும் உங்களுக்கு எதிராக கண்டன கடிதத்தில் கையொப்பமட வேண்டும் என்பது தான் எனது விருப்பம். உங்கள் பெயரிலும் ஒரு பெண் பெயர் சேர்ந்திருப்பதால் அந்தப் பெயரை நீக்கிவிட்டு, வெறும் ரவி என  வைத்துக் கொள்ளுங்கள்” என நடிகர் விஷால் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

”இது ஒன்றும் முதல் முறையல்ல, ராதா ரவி அவர்கள் நிறைய பெண்களை தவறாகன் பேசியதெல்லாம் கவனத்துக்கு வரவில்லை. நயன்தாரா விஷயத்தில் வெளிப்படையாக தெரிய வந்திருக்கிறது. சரியான நபர்களால் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே எனது விருப்பம்” என நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.

”திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவருக்கே இந்த நிலைமை என்றால், மற்ற நடிகைகளைப் பற்றி இவர் என்ன கூறுவார்” என நடிகை டாப்ஸி தனது கண்டத்தைப் பதிவு செய்துள்ளார்.

”சில அர்ப்பணிப்புள்ள நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். அவருடன் திரையைப் பகிர்ந்துக் கொண்டதை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். இது தவறான அணுகுமுறை என ரவியிடம் இன்று தெரிவித்தேன்” என நடிகையும் ராதாரவியின் சகோதரியுமான ராதிகா தெரிவித்துள்ளார்.

ராதாரவிக்கு கண்டனத்தைத் தெரிவித்ததோடு, அவர் மேல் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார் விக்னேஷ் சிவன். இதற்கிடையே தற்போது கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் ராதாரவி.

இதற்கு மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழிக்கு தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

"இந்த மேடையில் மட்டும் அல்ல, பல காலங்களாக தங்களுடைய இணையதள நேர்காணலிலும், பொது மேடைகளிலும், திரைப்பட விழாக்களிலும் இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள்..! இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி இருக்கிறது ..!

இது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும், மற்ற நடிகர்களுக்கும், அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும், ஒரு அவமானமான சூழ்நிலையையும், மனஉளைச்சளையும் ஏற்படுத்தித் தருகிறது என்பதை ஏன் தாங்கள் உணரவில்லை..?

திரைத்துறையில் தங்களது தந்தையாருக்குப் பிறகு தொடர்ச்சியாக ஐம்பது வருடங்கள் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கக்கூடிய தாங்கள் தங்களுடைய அனுபவங்களை நல்வழியில் பயன்படுத்தினால் அது வருகின்ற தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்..!

ஆனால் இதுபோன்ற கொச்சையான, கீழ்த்தரமான பேச்சுக்கள் உங்களுடைய மேன்மையை உயர்த்தாது மட்டுமல்லாமல், திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையும் சீரழிக்கும் என்பதை ஏன் உணரவில்லை ..? எது எப்படி இருப்பினும், இனிவரும் காலங்களில் நீங்கள் இதை உணர்ந்து, இதுபோன்ற வக்கிரமான பேச்சைத் தவிர்த்து செயல்படுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் ..!

அதை தவிர்த்து, இது போன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்றால் “தென்னிந்திய நடிகர் சங்கம் “ திரைத்துறையில் தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி, தீவிரமாக முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்" என நடிகர் சங்க தலைவர் நாசர், ராதாரவிக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.

Nayanthara Radharavi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment