கலையை கற்றுத்தந்த ஆசானை மறக்காத நடிகர்கள்.. கண்ணீருடன் நடனமாடி அஞ்சலி!

நடு ரோட்டில் நடிகர்கள் ஆவேசமாக நடனமாடிய வீடியோ

By: Updated: October 25, 2018, 12:30:39 PM

மறைந்த கூத்துப்பட்டறையின் நிறுவனர்,ந. முத்துசாமி இறுதி ஊர்வலத்தில் நடிகர்கள் கண்ணீருடன் நடனம் ஆடி இறுதி அஞ்சலி செலுத்திய காட்சிகள் திரையுலகினரை கண்கலங்க வைத்துள்ளது.

கூத்துப்பட்டறை குரு ந.முத்துசாமி:

கூத்துப்பட்டறையின் தந்தை என்று சினிமா பிரபலங்களால் அழைக்கப்படும் ந.முத்துசாமி நேற்று (24.10.18) காலமானர். தற்போது சினிமா உலகில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர்கள் பலர் இவர் பட்டறையில் தீட்டப்பட்ட வைரங்கள் தான்.

நடிகர் சங்கதலைவர் நாசரில் தொடங்கி, பசுபதி, மக்கள்செல்வன் விஜய் சேதுபதி,விமல், பாபிம் சின்ஹா ,ஜோக்கர் படத்தில் நடித்த சோம சுந்தரம் உட்பட பலர் இவரது கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள். தங்களை கொஞ்சம் கொஞ்சமாக சேதுக்கிய ஆசானை இவர்கள் யாருமே மறக்கவில்லை.அவரின் இறுதி ஊர்வலத்தில் கூட அவர் கற்றுத் தந்த கலையை அர்ப்பணிப்போடு செய்து முடித்துள்ளனர்.

நேற்றைய தினம் அவர், மறைந்த செய்தி வெளியானதும் அனைத்து நடிகர்களும் முத்துசாமியின் இல்லத்திற்கு சென்றனர்.  தந்தையை இழந்த மகன்கள் போல் அனைவரும் சோகத்தில் தங்களது இறுதி மரியாதையை செலுத்தி வந்தனர்.

தஞ்சாவூரில் பிறந்த ந. முத்துசாமி  நாடகத்தின் மீது தணியாத தாகம் கொண்டவர். காலம் காலமாக என்ற நாடகத்தை எழுதி நடித்து புகழின் உச்சிக்கே சென்றார். இவரது கலை சேவையைப் பராட்டி இந்திய அரசு கடந்த 2012 ஆன் ஆண்டில் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

தனது 82 ஆவது வயதில்  வயது முதிர்வின் காரணமாக ந. முத்துசாமி காலமான செய்தி  அவரது குடும்பத்தாரை மட்டுமில்லை, நாடக கலைஞர்கள்,  திரையுலகினர் என அனைவரையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரது  இறுதி ஊர்வலத்தில் அனைவரையும் கண்கலங்க வைத்த நிகழ்வு, விமல், பசுபதி, விதார்த் உள்ளிட்ட நடிகர்கள் குத்தாட்டம் ஆடி அவருக்கு கலை அஞ்சலி செலுத்தியது. நடு ரோட்டில் நடிகர்கள் ஆவேசமாக நடனமாடிய வீடியோ காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Koothupattarai muthuswamy passed away

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X