த்ரில்லர் கேம் மிஸ் பண்ணிடாதீங்க...ஸ்குவாட் கேம் சீசன் 2 ரிலீஸ் பற்றி முக்கிய அறிவிப்பு

ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்குவாட் கேம் சீசன் 2 ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்குவாட் கேம் சீசன் 2 ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
squid game 2

கெமிங் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்குவாட் கேம் சீசன் 2 எப்போது வெளியாகும் என்பது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல், இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிப்படங்களை விரும்பி பார்க்கின்றனர். அதேபோல் வெளிநாடுகளில் வெளியாகும் படங்கள் டப்பிங் செய்யப்பட்டு தமிழிலும் வெளியாகி வருகிறது. இப்படி வெளியாகும் பல படங்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக ட்ராமா மற்றும் த்ரில்லர் தொடர்பான படங்களை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்.

அதேபோல் திரைபடங்களை போல் ஒடிடி தளத்தில் வெளியாகும் வெப் சீரிஸ்களும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. வாரந்தோறும் பல சீரிஸ்கள் வெளியாகி வரும் நிலையில், அனைத்து சீரிஸ்களுமே ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதில் ஒரு சில சீரிஸ்கள் அடுத்த சீசன் எப்போது வெளியாகும் என்ற கேள்வியும் எழுப்பி வருகிறது. அந்த வகையில் வெளியான ஒரு வெப் சீரிஸ்தான் ஸ்குவாட் கேம் சீசன் 1.

கொரியன் மொழியில் தயாரான இந்த வெப் சீரிஸ் 9 எபிசோடுகளை கொண்டுள்ளது. விளையாட்டு மற்றும் த்ரில்லர் பாணியில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், அடுத்த சீசன் எப்போடு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இதனிடையே தற்போது ஸ்குவாட் கேம் சீசன் 2 எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment
Advertisements

அதன்படி வரும் டிசம்பர் 26-ந் தேதி ஸ்குவாட் கேம் சீசன் 2 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்ஃபிலிக்ஸில் வெளியாகும் இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சீரிஸின் கடைசி சீசன் 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

South Korea

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: