Squid Game Season 2 Trailer Out: கெமிங் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்குவாட் கேம் சீசன் 2 வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த தொடரின் டிரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
Advertisment
இன்றைய காலக்கட்டத்தில் சினிமா ரசிகர்கள் பல மொழி படங்கள் மட்டுமல்லாமல் வெப் தொடர்கள் உள்ளிட்ட பல வகையிலான சினிமாக்களை கண்டு ரசித்து வருகின்றனர். இதன் காரணமாக வெளிநாடுகளில் வெளியாகும் படங்கள் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக ட்ராமா மற்றும் த்ரில்லர் தொடர்பான படங்களை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்.
அதேபோல் திரைபடங்களை போல் ஒடிடி தளத்தில் வெளியாகும் வெப் சீரிஸ்களும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் ஒரு சில சீரிஸ்கள் அடுத்த சீசன் எப்போது வெளியாகும் என்ற கேள்வியும் எழுப்பி வருகிறது. அந்த வகையில் வெளியான ஒரு வெப் சீரிஸ்தான் ஸ்குவாட் கேம் சீசன் 1. கொரியன் மொழியில் தயாரான இந்த வெப் சீரிஸ் 9 எபிசோடுகளை கொண்டுள்ளது.
விளையாட்டு மற்றும் த்ரில்லர் பாணியில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், அடுத்த சீசன் எப்போடு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இதனிடையே தற்போது ஸ்குவாட் கேம் சீசன் 2 எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி வரும் டிசம்பர் மாதம் ஸ்குவாட் கேம் சீசன் 2 நெட்ஃபிலிக்ஸில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்த ஸ்குவாட் கேம் சீசன் 2 டிரெய்லர் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழில் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வரவேற்பையும் பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “