Advertisment

கே.பி.ஒய் பாலா கொடுத்த அதிர்ச்சி: மகிழ்ச்சியின் உச்சத்தில் பெண்: அப்படி என்ன செய்தார்?

சின்னத்திரையில் நட்சத்திரமாக இருக்கும் கே.பி.ஒய் பாலா ஒரு பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
KPY Bala

சின்னத்திரையில், ரியாலிட்டி ஷோக்களில் அசத்தி வரும் கே.பி.ஒய் பாலா, திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், தனது சம்பளத்தில் பாதியை மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அந்த வகையில் ஒரு பெண்மணிக்கு புதிய கடை வைத்து கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைனர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வந்தாலும், பாலா சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மலை கிராம மக்களுக்கு உதவும் வகையில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள் இவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று, சினிமா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பாலாவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது, ஒரு பெண்மணிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், ஒரு பெண்ணுக்கு டிபன் செண்டர் வைத்து கொடுத்துள்ளார். ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கும் பலருக்கும், நடிகர் லாரன்சுடன் இணைந்தும், தனியாகவும் உதவிகள் செய்து வரும் கேபி.ஒய்.பாலா, தற்போது ஒரு பெண்மணிக்கு உதவியுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைராகி வருகிறது.

இந்த வீடியோ பதிவில், இவர் தினசரி தனது வாழ்க்கையை நடத்துவதற்கே கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார். ஒரு டிபன் சென்டர் தொடங்க வேண்டும் என்று முயற்சி செய்துள்ளார். தற்போது அவருக்காக, நான் ஒரு டிபன் சென்டர் செய்து கொடுத்திருக்கிறேன். இந்த டிபன் சென்றர் முழுவதும் மெட்டலால் செய்யப்பட்டது என்று பதிவிட்டுள்ள பாலா, அந்த பெண்ணின் கண்களை மூடிக்கொண்டு அழைத்து வந்து டிபன் சென்டர் முன்பு வந்து அவர் கண்களை திறந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

KPY Bala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment