/indian-express-tamil/media/media_files/2025/07/19/bala-2025-07-19-12-39-42.jpg)
நடிகர் பாலா, தனது நடிப்புத் திறமையால் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபலமானவர். விஜய் டிவியின் 'கலக்கப்போவது யாரு?' நிகழ்ச்சி மூலம் நகைச்சுவை நடிகராகப் புகழ்பெற்ற பாலா, அதன் பின்னர் பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கலைத்துறையில் அவர் சாதித்துள்ள அளவுக்கு, தனது சமூக சேவைகளாலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். தனது சம்பளத்தில் பெரும் பகுதியை மக்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பாலா, தனக்கு சினிமாவில் கிடைத்த முதல் சம்பளத்தைப் பற்றியும், நடிகர் விஜய் சேதுபதியுடனான தனது நட்பைப் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார். பிஹைன்வுட்ஸ் டிவி யூடியூப் பக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாலா கூறிய தகவல்கள், விஜய் சேதுபதியின் தன்னலமற்ற மனப்பான்மைக்கு ஒரு சான்றாக அமைகின்றன.
"செப்டம்பர் 17, 2018 அன்று, எனக்கு முதல் சம்பளம் விஜய் சேதுபதி அண்ணனிடமிருந்து கிடைத்தது," செக்காக கிடைத்தது என்று பாலா உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார். அப்போது விஜய் சேதுபதி, பாலாவின் நெற்றியில் திருநீறு பூசி, "இன்று நீ வாங்கும் இந்த சம்பளம், எதிர்காலத்தில் உனது ஒரு நாள் சம்பளத்தில் பாதி" என்று சொல்லி ஆசீர்வதித்தார். இந்தச் சம்பவம், விஜய் சேதுபதி பாலாவின் திறமையை அன்று முதலே அங்கீகரித்ததைக் காட்டுகிறது. அவர் பாலா பெரிய ஆளாக வருவார் என்று கணித்தது, அவர்களின் நட்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.
விஜய் சேதுபதி, தனது நட்பு வட்டாரத்தில் உள்ள கலைஞர்களுக்கு உதவுவதில் எப்போதும் முன் நிற்பார். அதற்கு உதாரணமாக, பாலாவுக்கு 'லாபம்' திரைப்படத்தில் ஒரு வாய்ப்பு கிடைக்க விஜய் சேதுபதி உதவினார். இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனின் உதவியாளர் ஆலயமணிக்கு போன் செய்து, "பாலா நல்லா நடிப்பாரு, அவருக்கு வாய்ப்பு கொடுங்கள்" என்று சிபாரிசு செய்துள்ளார். இந்த உதவி, பாலாவின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. விஜய் சேதுபதி பாலாவுக்கு கொடுத்த ஆதரவு, வெறும் சம்பளம் கொடுப்பதுடன் நிற்கவில்லை; அது ஒரு திறமையான கலைஞனை ஊக்குவித்து, அவர் மேல் நம்பிக்கை வைத்ததன் அடையாளம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.