தமிழ்நாட்டு மக்கள் போட்ட பிச்சை... படத்தின் ஓபனிங் கார்டு இதுதான்: கண்ணீர் மல்க பேசிய பாலா

கே.பி.ஒய் பாலாவின் நடிப்பில் வெளியாக உள்ள காந்தி கண்ணாடி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாலா கண்ணீர் மல்க பேசியது பார்ப்போரை மனம் நெகிழச் செய்தது.

கே.பி.ஒய் பாலாவின் நடிப்பில் வெளியாக உள்ள காந்தி கண்ணாடி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாலா கண்ணீர் மல்க பேசியது பார்ப்போரை மனம் நெகிழச் செய்தது.

author-image
WebDesk
New Update
kpy bala

சமீபத்தில் நடைபெற்ற காந்தி கண்ணாடி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் பாலா, தனது வாழ்க்கைப் பயணம் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் தனக்கு அளித்த ஆதரவு குறித்துப் பேசினார். தனது பேச்சின் போது, அவர் மக்களின் ஆதரவை “பிச்சை” என்று உணர்ச்சிப்பூர்வமாக விவரித்து பேசிய வீடியோ பிஹைண்வுட்ஸ் டிவி யூடியூப் பக்கத்தில் வெளியாகி உள்ளது.  விஜய் தொலைக்காட்சியின் பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு? மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான பாலா, தற்போது காந்தி கண்ணாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

Advertisment

கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா, நண்பன் ஒருவன் வந்த பிறகு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், புலிக்குத்தி பாண்டி, அண்ணாத்த, வீரம் போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், தனது சமூக சேவைகளாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர். தான் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை மக்களுக்கு உதவுவதற்காகப் பயன்படுத்துவதாகக் கூறினார்.

காந்தி கண்ணாடி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், பாலா தனது வாழ்க்கை பயணத்தை கண்ணீர் மல்கப் பகிர்ந்து கொண்டார். நடிகர் பாலா, தான் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் தந்தையின் மகன் என்றும், திரைப்படத் துறைக்கு எந்தப் பின்னணியும் இல்லாமல் வந்தவர் என்றும் தெரிவித்தார். இருந்தபோதும், தமிழ்நாட்டு மக்கள் அளித்த ஆதரவு மற்றும் ஊக்குவிப்பு தான் தனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாகக் கூறினார்.

நடிகர் லாரன்ஸ் தன்னைப் பார்த்து, “நீ வெற்றி பெற்றால், உன்னைப் போன்ற 30 முதல் 50 இளைஞர்களுக்கு திரைத்துறையில் வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறியதை பாலா நினைவுகூர்ந்தார். இந்த வார்த்தைகள் தனக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்ததாகத் தெரிவித்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும், காந்தி கண்ணாடி திரைப்படம் மூலம் அது நனவாகியிருப்பதற்கு நன்றியைத் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

திரைப்படத்தின் டைட்டில் கார்டு தொடங்கும்போதே, “தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி” என்று இடம் பெற்றிருப்பதாக பாலா கூறினார். தான் ஒரு "பிச்சைக்காரன்" என்றும், தமிழ்நாட்டு மக்கள் தனக்கு அளித்தது ஒரு பிச்சை என்றும் பாலா உணர்ச்சிவசப்பட்டு கூறினார். இந்த உணர்வுப்பூர்வமான பேச்சு, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரையும் கவர்ந்தது. இறுதியாக, பாலா தனது நண்பர்கள் அபினேஷ், மணிகண்டன், மற்றும் கே.பி. வினோத் ஆகியோருக்கும், நிகழ்ச்சியை நடத்திய நடிகை மணிமேகலைக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். காந்தி கண்ணாடி திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

Entertainment News Tamil KPY Bala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: