/indian-express-tamil/media/media_files/2025/09/05/gandhi-kannadi-2025-09-05-10-42-24.jpg)
இயக்குநர் ஷெரீப் இயக்கத்தில், காந்தி கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் சின்னத்திரை பிரபலமான கே.பி.ஒய் பாலா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இன்று செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. முதல் படத்திலேயே, பாலா இரண்டு பெரிய திரைப்படங்களுக்கு எதிராக மோதுகிறார். இதே நாளில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பேட் கேர்ள் ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகின்றன. முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய சவாலை எதிர்கொள்ளும் பாலாவுக்கு திரையுலகில் நல்ல எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதிமூலம் க்ரீயேஷன்ஸ் தயாரிப்பில் கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகமாகியுள்ள காந்தி கண்ணாடி திரைப்படம் இன்று (செப்டம்பர் 5) திரைக்கு வந்தது. நேற்று மாலை சத்யம் தியேட்டரில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட நிலையில், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் உள்ளிட்ட பலர் பாலாவின் காந்தி கண்ணாடி படத்துக்கான விமர்சனங்களை சமூக வலைதளத்தில் அடுக்கி உள்ளனர். விஜய் டிவியில் இருந்து ஒரு டஜன் பிரபலங்கள் சினிமாவுக்கு வந்திருக்கும் நிலையில் சந்தானம், சிவகார்த்திகேயன், யோகி பாபு, கவின், புகழ் வரிசையில் தற்போது கே.பி.ஒய் பாலாவும் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.
மூவி ட்ராக்கர் ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் காந்தி கண்ணாடி படத்தை பார்த்துவிட்டு 5க்கு 3.25 மதிப்பெண்கள் கொடுத்துள்ளார். கே.பி.ஒய் பாலா ஹீரோவாக அட்டகாசமாக அறிமுகமாகியுள்ளார். நேச்சுரலா அவருக்கு என்ன வருதோ அப்படியே திரையில் தோன்றி நடித்துள்ளார். பாலாஜி சக்திவேலின் நடிப்பு மிரட்டலாக உள்ளது. நல்ல ட்விஸ்ட் மற்றும் திருப்பங்களுடன் எமோஷனலான கிளைமேக்ஸ் உடன் படம் உள்ளதாக ரமேஷ் பாலா விமர்சித்துள்ளார்.
#GandhiKannadi [3.25/5] : A good comedy emotional entertainer..
— Ramesh Bala (@rameshlaus) September 4, 2025
Interesting twists and turns with an emotional climax.. @BjBalaOfficial makes a good debut as Hero.. He has done what comes naturally to him.. @namikay1 has done a neat job..#BalajiSakthivel and #Archana are… pic.twitter.com/5qT3SzYI8T
வயதான காலத்தில் ஏற்படும் காதல் கதையை மையமாக வைத்து காந்தி கண்ணாடி படத்தை படமாக்கியுள்ளனர். கேபிஒய் பாலாவின் நடிப்பு நல்லா இருக்கு, கடைசியாக 30 நிமிட கிளைமேக்ஸ் காட்சி எமோஷனலாக உள்ளது. பாலா படத்தில் அன்பு,காதல்தான் எல்லாம் என்று கூறும் விதமாக உள்ளது. கிளைமாக்ஸ் காட்சிகள் அழுகையாக உள்ளது என்றெல்லாம் கலவையான விமர்சனம் வந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.