Advertisment

ஏழை குழந்தைகளுடன் ஜாலி ட்ரிப்: அந்த மனசுதான் கடவுள்; கே.பி.ஒய். தங்கதுரை வைரல் வீடியோ!

நான் அவர்களை எனது காரில் அழைத்துச் சென்று அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான நாளை கொடுத்தேன் என தங்கதுரை நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
thangadurai KPY

கே.பி.ஒய். தங்கதுரை

விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நடிகர் தங்கதுரை தனது பி.எம்.டபிள்யூ காரில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஊர் சுற்றிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இவரது செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Advertisment

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பல நட்சத்திரங்கள் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் தங்கதுரை. பழைய ஜோக் தங்கதுரை என்று அழைக்கப்படும் இவர், தனது பழைய ஜோக்குகளை ஒரு புத்தமாக வெளியிட்டுள்ளார். இந்த புத்தகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர், நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான பல படங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என பிஸியாக நடித்து வரும் தங்கதுரை, நீண்டகாலமாக பி.எம்.டபிள்யூ கார் வாங்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்துள்ளார். இவரின் ஆசை சமீபத்தில் நிறைவேறிய நிலையில், இந்த காரை வைத்து தங்கதுரை செய்த ஒரு செயல் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

போதுவாக ஒரு காரை வாங்கினால் முதலில் தனது குடும்பத்துடன் வெளியில் செல்லத்தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் தங்கதுரை, தனது புதிய காரில் ஏழை குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்னையை சுற்றி வந்துள்ளார். தங்கதுரையின் இந்த செயலை பலரும் பாராட்டி வரும் நிலையில், இது தொடர்பான வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இந்த பதிவில், எனது நீண்ட பயணம் மற்றும் பல போராட்டங்களுக்குப் பிறகு நான் எனது கனவுக் காரான பி.எம்.டபிள்யூவை வாங்கினேன். இந்த மகிழ்ச்சியை இந்த அன்பான ஏழைக் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். நான் அவர்களை எனது காரில் அழைத்துச் சென்று அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான நாளை கொடுத்தேன். அவர்களின் அன்பும் மகிழ்ச்சியும் விலைமதிப்பற்றது. உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் அன்புக்கும் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் நன்றியுடனும் உணர்கிறேன் மக்களே என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment