/indian-express-tamil/media/media_files/MeysG3RXz9j0s4Z3s3DX.jpg)
கீர்த்தி சுரேஷ் பாராட்டு
சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை ஒருங்கிணைந்தபுதிய பன்னாட்டுவிமான நிலையம் நவீன வசதிகளுடன், ரூ.1260 கோடி முதலீட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி புதிய முனையத்தை திறந்து வைத்தார். இதில் 108 குடியுரிமைகவுண்டர்கள், 100 பயணிகள்பாதுகாப்புகவுண்டர்கள், 17லிப்ட்கள், 17 எஸ்கலேட்டர்கள், 6 வாக்கலேட்டர்கள், பயணிகள் உடைமைகள் வரும் 6 கண்வயர் பெல்டுகள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது.
What a smooth clearance at the immigration of our new International Terminal, Chennai @aaichnairport and the new infrastructure is just bang on! Thanks to the concerned authorities 😊🙏🏻 pic.twitter.com/NpvOoAN34d
— Keerthy Suresh (@KeerthyOfficial) September 14, 2023
இந்த நிலையில் விமான நிலையம் வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் குடியுரிமை சோதனைமுடித்து கொண்டுதனது சமூக வலைதளமான எக்ஸ்சில், சர்வதேச முனையத்தில் சிறப்பாகஅமைதியாக நடந்த குடியுரிமை சோதனை, விமான நிலையம் உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தது. சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி என பதிவிட்டு உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.