Advertisment
Presenting Partner
Desktop GIF

"மகளின் மரணத்திற்கு பின்னர் நான் மீண்டு வர உதவியவர் லதா மங்கேஷ்கர்" பாடகி சித்ரா உருக்கம்

தனது மகளின் மரணத்திற்கு பின்னர், அந்த துயரில் இருந்து தான் மீண்டு வருவதற்கு லதா மங்கேஷ்கர் தனக்கு உதவியதாக பாடகி சித்ரா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Lata and Chitra

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் எனப் பாராட்டப்படுவர் பாடகி சித்ரா. இந்நிலையில், தனது மகளின் மரணத்திற்கு பிறகு, அந்த துயரில் இருந்து தான் மீண்டு வருவதற்கு பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷகர் தனக்கு உதவி செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். லதா மங்கேஷ்கரின் வார்த்தைகள் தனக்கு உந்துசக்தியாக இருந்ததாகவும், இசைத்துறையில் தன்னை தொடர்ச்சியாக இயங்க வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: KS Chithra recalls how Lata Mangeshkar helped her after daughter’s death: ‘Dedicate the rest of your life to music’

 

ஒ2 இந்தியாவுடனான நேர்காணலில் சித்ரா பல விஷயங்களை நினைவு கூர்ந்தார். குறிப்பாக, "அனைத்து பெண் பாடகர்களும் லதா மங்கேஷ்கரின் பாடல்களை கேட்டு வளர்ந்தோம். லதா மங்கேஷ்கரின் 80-வது பிறந்தநாளின் போது அவருக்காகவே ஒரு ஆல்பத்தை உருவாக்கினோம். அப்போது, என்னை அழைத்து லதா மங்கேஷ்கர் பாராட்டினார்" என சித்ரா தெரிவித்துள்ளார்.

தான் மிகுந்த துயரத்தில் இருந்த போது லதா மங்கேஷ்கரின் வார்த்தைகள் தன்னை ஊக்கப்படுத்தியதாக பாடகி சித்ரா குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தனது மகள் மரணத்திற்கு பின்னர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை சித்ரா தவிர்த்து வந்தார். ஹைதராபாத்தில் லதா மங்கேஷ்கரை கௌரவப்படுத்தும் விதமாக நடைபெற்ற விருது வழங்கும் விழாவிலும் பங்கேற்க சித்ரா மறுத்திருந்தார். இச்சம்பவம் குறித்து சித்ரா நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

அதன்படி, "நான் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், சரியான மனநிலையில் இல்லாத காரணத்தினால் விழாவிற்கு செல்ல நான் மறுத்திருந்தேன். அப்போது, லதா மங்கேஷ்கர் என்னை தொடர்பு கொண்டார். எனது கடினமான சூழ்நிலை குறித்து அனைத்தையும் தான் அறிவதாக கூறினார். குறிப்பாக, இனி என் வாழ்நாள் முழுவதும் இசைக்காகவே இருக்க வேண்டுமென லதா மங்கேஷ்கர் கூறினார். எனவே, நான் வீட்டிலேயே இருக்காமல் விழாவிற்கு சென்று விருதை வாங்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். என்னை பார்ப்பதற்காக தானும் விழாவிற்கு வருவதாக லதா மங்கேஷ்கர் கூறினார். அதனால் தான் நான் விழாவிற்கு சென்றேன்" என பாடகி சித்ரா குறிப்பிட்டுள்ளார்.

பாடகி சித்ரா பல்வேறு மொழிகளில் சுமார் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். அவர் தனது அன்பான குரலின் மூலம் நாட்டு மக்களால் அறியப்படுகிறார். அவரை பியா பசந்தி என இந்தியிலும், வானம்பாடி என மலையாளத்திலும், சின்னக் குயில் என தமிழிலும், கோகிலே என கன்னடத்திலும், சங்கீத சரஸ்வதி என தெலுங்கிலும் ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Singer Chitra Lata Mangeshkar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment