’உன் பெயர் சொல்ல ஆசை தான்’… 90-ஸ் கிட்ஸ்களின் பேவரட் பாடல்களின் ஒன்றான மனதை வருடும் இந்தப் பாடல் நிச்சயம் காதலர்களின் தேசிய கீதமாகவே இருந்தது. 1999-ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய், குஷ்பூ, ரம்பா, மோனிகா, மணிவண்ணன், மன்சூர் அலிகான், சுந்தர்ராஜன், கோவை சரளா உள்ளிட்டோரின் நடிப்பில் லவ், செண்டிமெண்ட், காமெடி, ஆக்சன் அனைத்தின் கலவையாக ‘மின்சார கண்ணா’ படம் வெளியானது. ஆண்களை தன்னைச் சுற்றி எந்த ஒரு இடத்திலும் வைத்து கொள்ளாத குஷ்பூ எப்படியோ விஜய்யை மட்டும் ஏற்றுக் கொள்கிறார். படிப்படியாக குடும்பத்தையும் சமையல்காரர், வீடு காவலாளி என உள்ளே சேர்த்து கொள்ள வைக்கிறார். விஜய்யின் ஒட்டுமொத்த குடும்பமும் விஜய்-மோனிகா காதலுக்காக பாடுபடும்.
வித்தியாசமான கோணத்தில் விஜய் நடித்த இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். காதல் என்று வந்து விட்டால் கூலான காதலனாகவும், காமெடி என்றால் சேட்டை செய்யும் நடிகராகவும், ஆக்சன் என்றால் மாஸாக டஃப் கொடுக்கும் கலக்கலான மின்சார கண்ணணாகவும் விஜய் அசத்தலாக நடித்து இருந்தார். அந்தக் காலகட்டத்தில் விஜய் ஒரு முன்னணி ஆக்ஷன் நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருந்தாலும், இந்தப் படம் அவரை ஒரு சிறந்த நகைச்சுவைக் கலைஞராகவும் வெளிப்படுத்தியது.
அண்மையில், பிளாக்ஷீப் நடத்திய நேர்க்காணலில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், மின்சார கண்ணா படத்தின்போது விஜயுடனான ஏற்பட்ட அனுபவம் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். படத்தில் விஜய்யின் உடல் மொழியும், இயல்பான முகபாவனைகளும், கதாபாத்திரத்திற்குத் தேவையான அப்பாவித் தனத்தையும், நகைச்சுவையையும் சிறப்பாக வெளிப்படுத்தியதாகக் கூறினார். விஜய்யின் ஆக்ஷன் இமேஜை தன் படத்தில்தான் உடைத்ததாக குறிப்பிட்ட கே.எஸ். ரவிகுமார், கதை லவ் சப்ஜெட் என்றும், ஆனால் விஜய்யை முழுநீள நகைச்சுவை நடிகராகத் தான் பயன்படுத்தியதாகவும் கூறினார்.
K.S.Ravikumar on Thalapathy Vijay in Minsara Kanna 💫📽️🎬 #thalapathyvijay #minsarakanna
Posted by Film Frequency on Wednesday, July 2, 2025
'மின்சார கண்ணா' திரைப்படம், விஜய்யின் திரைப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது. இந்தத் திரைப்படம் அவரை ஒரு பன்முக நடிகராக நிலைநிறுத்தியதுடன், நகைச்சுவைக் கதாபாத்திரங்களிலும் அவரால் சிறக்க முடியும் என்பதை நிரூபித்தது. இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் ரசிகர்களால் நினைவுகூரப்பட்டு சிரிக்க வைக்கின்றன.'ப்ரண்ட்ஸ்', 'பகவதி' போன்ற படங்களில் நகைச்சுவை காட்சிகளில் கிடைத்த வெற்றிக்கு 'மின்சார கண்ணா' முன்னோடியாக அமைந்தது எனலாம்.