நான் கோபப்படுவதைப் பார்த்து சிவாஜி சார், இவன் டைக்ரடா இல்ல பொறுக்கியா என ரஜினி சாரிடம் கேட்டிருக்கிறார் என கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார். மேலும் நாட்டாமை மிக்சர் மாமா யார் என்றும் கூறியிருக்கிறார்.
Advertisment
பிஹைண்ட்வுட் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் நடிகர் சரத்குமார் இருவரும் தங்கள் படங்களில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்ந்துக் கொண்டனர்.
அதில், நாட்டாமை படத்தில் நீண்ட வசனத்தை பேசிக் கொண்டிருந்த சரத்குமார் திடீரென வசனத்தை மறந்துவிட்டார். ஒரு சிறிய கல் கீழே கிடந்து தொந்தரவு செய்ததாக சத்தம் போட்டார். நான் அந்த கல்லை தேடி பிடித்து, இந்த கல் தான் தொந்தரவு செய்ததா எனக் கேட்டு, டயலாக் மறந்துவிட்டால் நேரடியாக சொல்லுங்கள் என்றேன் என கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.
கோபம் வந்தால் சில கெட்ட வார்த்தைகளைப் பேசுவேன். படையப்பா சூட்டிங்கில் அப்படி கோபப்பட்டு கத்தினேன், சிலரை அடித்தேன். அதைப் பார்த்துவிட்டு சிவாஜி சார், இவன் டைக்ரடா இல்ல பொறுக்கியா என ரஜினி சாரிடம் கேட்டிருக்கிறார்.
அடுத்து, சொத்து எழுதிக் கொடுக்கும் சீனில், மகள் கேரக்டர் கையெழுத்து போடும்போது மட்டும் அழச் சொன்னேன். சிவாஜி சார் ஏன்? எனக் கேட்டு நடித்து காட்டச்சொன்னார். நான் காட்டியவுடன், யாரை நினைச்சுக்கிட்ட எனக் கேட்டார். என் பொண்ணை நினைச்சுக்கிட்டேன் என்று கூறினேன். நீ நல்ல நடிகன்டா என பாராட்டினார்.
நாட்டமை படத்தில் மிக்சர் சாப்பிடும் கேரக்டரில் நடித்தது செட்டில் வேலை பார்த்த எலக்ட்ரீசியன் தான். அவரை கூப்பிட்டு நடிக்கச் சொன்னப்போது நடிக்க மறுத்தார். நான் மிக்சர் மட்டும் சாப்பிடச் சொல்லி படமாக்கினேன். ஒரு படத்தில் நடிக்க சரத்குமார் ரொம்ப லேட்டாக வந்தார். நான் போகச்
சொல்லிவிட்டேன். ஆனால் அவர் நாங்க இங்கதான் இருப்பேன் எனக் கூறினார். பின்னர் சூட்டிங் முடிந்து இருவரும் ஒரே காரில் தான் வீட்டிற்கு கிளம்பினோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“