/tamil-ie/media/media_files/uploads/2020/06/Kumki-Ashwin-married-his-girl-friend-vidhyasree.jpg)
Kumki Ashwin married his girl friend vidhyasree
'கும்கி' மற்றும் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் அஸ்வின் ராஜா, ஜூன் 24 அன்று சென்னையில் தனது காதலி வித்யஸ்ரீயை கரம் பிடித்தார். COVID-19 காரணமாக பூட்டப்பட்டுள்ளதால், இத்திருமணமனத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.
அதிக செலவு இல்லை… உங்க முகம் பளபளக்க எளிய ஃபேஸ் வாஷ்!
அஸ்வின் மற்றும் வித்யஸ்ரீ கடந்த 4 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். அவர்களது பெற்றோர் இறுதியாக காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதோடு, திருமண ஏற்பாடுகளையும் செய்தனர். ராஜசேகரின் மகள் வித்யஸ்ரீ சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் முதுகலைப் படிப்பை முடித்திருக்கிறார்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கரின் உரிமையாளர்களில் ஒருவரான தயாரிப்பாளர் சுவாமிநாதனின் மகன் தான் அஸ்வின் ராஜா. இந்த இளம் நடிகர் கடந்த ஆண்டு ஜோதிகாவின் 'ஜாக்பாட்' மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் நடித்திருந்தார்.
மரணத்தின் ஆட்டம்: ப.சிதம்பரம் கட்டுரை
இந்த திருமணத்திற்கு இரு வீட்டார் சார்பில் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விக்ரம் பிரபு, நயன்தாரா உள்ளிட்ட பலரும் அஸ்வினுக்கு போன் மூலம் வாழ்த்து கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அஸ்வின் வித்யாஸ்ரீ திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.