நடிகை குஷ்பூ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“நான் இப்போது நினைத்துப் பார்த்தால் அண்ணாத்த திரைப்படத்தை நான் பண்ணியிருக்க வேண்டாம் என்று தோணுகிறது” என்று கூறியுள்ள நடிகை குஷ்பூ, அதற்கு என்ன காரணம் என்ன என்பதையும் கூறியிருக்கிறார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பாண்டியராஜன், மீனா, லிவிங்ஸ்டன், குஷ்பூ, பிரகாஷ்ராஜ், வேலராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்த அண்ணாத்த திரைப்படம் 2021-ம் ஆண்டு வெளியானது. அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அண்ணாத்த திரைப்படம் அதிகமான விமர்சனங்களை எதிர்கொண்டது. அண்ணாத்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார். அண்ணாத்த படத்தில் ரஜினி அறிமுகமாகும் ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியன் பாடியிருந்தார். செப்டம்பர் 25, 2020-ல் அவர் இறப்பதற்கு முன்பு கடைசியாக பாடியது
‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் தான்.
இந்நிலையில், அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்த அனுவங்கள் குறித்து, படம் வெளியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகை குஷ்பூ மனம் திறந்து பேசியுள்ளார்.
சமீபத்தில் நடிகை குஷ்பூ அளித்த நேர்காணலில், அண்ணாத்த படத்தில் நான் நடித்ததை இப்போ யோசித்துப் பார்த்தால் நான் அந்த படத்தில் நடித்திருக்கக் கூடாது என்று எனக்கு தோணுகிறது. நான் அந்த படத்தை ஒத்துக் கொள்வதற்கு காரணம் என்னிடம் அப்போது ரஜினி சாருக்கு ஜோடி இல்லை என்று சொன்னார்கள். எங்க கிட்ட சொன்ன கதையில் எங்களுக்கு முக்கியத்துவம் இருந்தது. இன்டர்வெலுக்கு பிறகு தங்கச்சியை ரஜினி தேடி போராருன்னா ஒரு பக்கம் நான் போவேன் இன்னொரு பக்கம் மீனா போவதாக கதை எங்களிடம் சொல்லப்பட்டது. நாங்களும் லொகேஷனில் பேசும்போது ஒன்சைடு காதல் தானே இருக்கு, அதற்கு சின்ன பட்ஜெட்டில் ஒரு நடிகை போட்டால் போதும் என்று இரண்டு மூன்று நடிகைகளின் பெயரை சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஏன்னா ரஜினி சாருக்கு டூயட் சாங் எல்லாம் கிடையாது என்று சொன்னார்கள்.
ரஜினி சார் மீது ஒன் சைட் காதலில் ஒரு ஆர்ட்டிஸ்ட் அவரை பாலோ பண்ணிட்டு வருவாங்க என்று தான் சொன்னாங்க. நாங்களும் ரஜினி சாரை ஒன் சைடு ஆக காதலிக்கிறது, டாக்டர் கேரக்டர் என்பதால் அந்த நடிகை சரியாக இருக்கும், இந்த நடிகை சரியாக இருக்கும் என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், திடீரென்று பார்த்தால் ஒரு ஹீரோயின் வந்தாங்க, டூயட் சாங் வந்தது, பிறகு கதையே மாறிடுச்சு. கதை மாறியதால் எங்களுடைய கேரக்டர் முக்கியமில்லாமல் போய்விட்டது. இன்டெர்வலோட எங்களுடைய கேரக்டர் முடிந்துவிட்டது. நாங்கள் ஏன் வருகிறோம் எதுக்கு வருகிறோம்ங்கிறதே தெரியாமல் போய்விட்டது. அது வருத்தமாக தான் இருந்தது. ஆனாலும், இயக்குனர் சிவா, கேமரா மேன் வெற்றி இவங்க எல்லாம் ரொம்ப திறமையானவர். அவர்களோட பேசிய அனுபவம் கிடைத்தது அவ்வளவுதான்” என்று நடிகை குஷ்பூ மனம் தெரிந்து பேசியுள்ளார்.
ஏற்கனவே அண்ணாத்த திரைப்பட டீஸர் வெளியான சமயத்தில் குஷ்பூ, மீனா காட்சிகளை பார்த்து இணையத்தில் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டது. டீசர் கூட சீரியல் ப்ரோமோ மாதிரி இருக்கிறது என்று கூட அந்த நேரத்தில் அதிகமானோர் கிண்டல் செய்து வந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.