கேக் மீது செர்ரி பழம்… குஷ்பு-பிருந்தா காம்போவில் புதிய டான்ஸ் ஷோ

கலர்ஸ் தமிழ் டிவியின் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுள்ள நடிகை குஷ்பு, இந்த நிகழ்ச்சியில் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் என் பக்கத்தில் இருப்பது கேக் மீது செர்ரி பழத்தை வைத்தது போல உள்ளது என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

actress Kushboo, dance master Brina, Kushboo and Brina Master as judge in tv show, Colors Tamil TV show, Dance Vs Dance season 2 promo, கலர்ஸ் தமிழ் டிவி, கலர்ஸ் தமிழ் டிவி டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2, கேக் மீது செர்ரி பழம், குஷ்பு பிருந்தா காம்போவில் புதிய டான்ஸ் ஷோ, colors tamil tv new show, tamil tv shows, kushboo news

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நடிகை குஷ்புவையும் நடன இயக்குனர் பிருந்தாவையும் நடுவர்களாகக் கொண்டு டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் 2 ரியாலிட்டி ஷோவைத் தொடங்குகிறது. அதற்கான புரோமோவும் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும் பாஜக தலைவருமான குஷ்புவையும் பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டரையுடம் நடுவர்களாகக் கொண்டு புதிய காம்போவில் டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் 2 என்ற புதிய டான்ஸ் ஷோவை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தொடங்குகிறது.

நடிகை குஷ்புவும் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டரும் இணைந்து டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் 2 நிகழ்ச்சிக்கான ஒரு புதிய புரோமோவை வெளியிட்டனர்.

தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சீரியல்கள்தான் கோலோச்சிக்கொண்டிருந்தன. ஆனால், விரைவிலேயே ரியாலிட்டி ஷோக்கள் பெரிய அளவில் ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்று வெற்றி அடையத் தொடங்கி விட்டன. அதன் விளைவாக தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள் அனைத்திலும் கான்செப்ட் ஒன்றாக இருந்தாலும் அதன் அளவில் வித்தியாசமான முறையில் பிரம்மாண்டமாக அளித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தமிழ் ரசிகர்கள் இடையே கவனத்தைப் பெற்று பிரபலமான பொழுதுபோக்கு சேனலாக உருவானது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பிரபல நடிகை குஷ்பூவை நடுவராக மீண்டும் கொண்டு வருகிறது. இதற்கான புதிய புரோமோவையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த புரோமோவில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்களுடன் நடிகை குஷ்பு மற்றும் இந்நிகழ்ச்சியின் சீசன் 1 நடுவரான பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டரும் இடம் பெற்றுள்ளார். பிருந்தா மாஸ்டர் இந்த சீசனிலும் அவர் நடுவராக இருக்கிறார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாக உள்ள டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 புரோமோவில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் நிகழ்ச்சியின் நடுவர்கள் நடிகை குஷ்புவும் பிருந்தா மாஸ்டரும் பேசி உள்ளனர்.

டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 இதுவரை பார்த்திராத போட்டியை உறுதிசெய்வதோடு பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக இருக்கும் என்று நடுவர்கள் குஷ்புவும் பிருந்தாவும் புரோமோவில் உறுதி அளித்துள்ளார்கள்.

கலர்ஸ் தமிழ் சேனலின் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் 2 நிகழ்ச்சியின் புதிய புரோமோ குறித்து நடிகை குஷ்பூ கூறுகையில், “டான்ஸ் என்பது ஒரு கலை, அது எப்போதும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. நடனத்தின் மீது எனக்கு அதிக ஈடுபாடு உள்ளது. டான்ஸ் வெசர்ஸ் டான்சின் முதல் சீசனை நான் பார்த்தேன், இது மிகவும் அற்புதமானது. பிருந்தா என் பக்கத்தில் இருப்பது கேக் மீது ஒரு செர்ரி பழத்தை வைப்பது போன்றதாகும். எனவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு இரட்டை மகிழ்ச்சி. மேலும், எப்போதும் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் முற்போக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் போன்ற தொலைக்காட்சியுடன் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவை தடைகளை உடைத்து புதிய அளவுகோல்களை அமைக்கும். தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வேகமாக வளர்ந்து வருவதை நான் கண்கூடாக பார்க்கிறேன், அவர்கள் இணையற்றவர்களாக இருக்கிறார்கள் என்று என்னால் கூற முடியும்” என்று கூறினார்.

அதே போல, இது குறித்து பிரபல நடன இயக்குனர் டிவிடி சீசன் 1 நடுவருமான பிருந்தா மாஸ்டர் கூறுகையில், “நான் சீசன் 1 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தேன்,அதில் பிரம்மாண்டத்திற்கு குறைவே இல்லை. சீசன் 2 இன்னும் நம்பிக்கைக்குரியதாகத் தோன்றுகிறது. மேலும் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று நான் நம்பும் போட்டியாளர்களை சந்திக்க நான் உண்மையிலேயே ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் தற்போது ஒளிபரப்பாக உள்ள சீசன் 2 முற்றிலும் புதியது மற்றும் முந்தைய சீசனில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதுதவிர, ஒரு சிறந்த நண்பரான குஷ்பூவுடன் நானும் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.

கலர்ஸ் தமிழ் டிவியின் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுள்ள நடிகை குஷ்பு, இந்த நிகழ்ச்சியில் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் என் பக்கத்தில் இருப்பது கேக் செர்ரி பழத்தை வைத்தது போல உள்ளது என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kushboo and brina master as judge in colors tamil tv dance vs dance season 2 promo

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com