Advertisment

இப்பவும்கூட கிண்டல் பண்றாங்க- குஷ்பூ மகள் வேதனை

குஷ்பூவின் இரண்டாவது மகளான அனந்திதா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தான் உடல் எடையை குறைத்தாலும் என்னை கேலி செய்வதாக கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
இப்பவும்கூட கிண்டல் பண்றாங்க- குஷ்பூ மகள் வேதனை

குஷ்பூவின் இரண்டாவது மகளான அனந்திதா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தான் உடல் எடையை குறைத்தாலும் என்னை கேலி செய்வதாக கூறியுள்ளார்.

Advertisment

தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை குஷ்பூ. குஷ்புவின் இயற்பெயர் நக்கர்த் கான், சினிமாவிற்காக குஷ்பூ என்று மாற்றிக்கொண்டார். இவர் பின்நாட்களில் அரசியல்வாதியாக செயல்படத் தொடங்கினார். 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் இவர் இயக்குநர் சுந்தர்.சி-யை 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு அவந்திதா, அனந்திதா  என்று இருமகள் உள்ளனர். இவருடன் குஷ்பூ எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டபோது, இரு மகளின் உடல் எடையை பற்றிய கேலிகள் அதிகமாக பதிவிடப்பட்டன. இதற்கு சரியான பதிலடி குஷ்பூ கொடுத்தாலும், இது தொடர்ந்துகொண்டிருந்தது. இந்நிலையில் இரு மகள்களும் எடை குறைத்தனர். இந்த புகைப்படத்தையும் குஷ்பூ பதிவிட்டார்.

ஆனால் உடல் எடையை அறுவை சிகிச்சை செய்து குறைத்ததாகவும். கிழவி போல் தோற்றம் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர். எப்படி இருந்தாலும் எதையாவது சொல்வார்கள் என்று குஷ்பூவின் இரண்டாவது மகள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். குண்டாக இருந்தபோது அம்மாவுடன் ஒப்பிட்டு பேசினார்கள். தற்போது அறுவைசிகிச்சை செய்து உடல் எடையை குறைத்ததாக பேசுகின்றனர் என்று அவர் பேட்டியளித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment