Advertisment

ஈகோ இல்லாத பிரபு… சூப்பர் ஹிட் மூவியின் 30 ஆண்டு நினைவை பகிர்ந்த குஷ்பூ

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படங்களில் ஒன்றான சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதில் ஹீரோயினாக நடித்த குஷ்பூ தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதோடு, சின்னத்தம்பி படத்தில் ஹீரோவாக நடித்த பிரபு பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kushboo, kushboo remeber, 30 years of chinna thambi movie, chinna thambi movie biggest blockbuster, குஷ்பூ, சின்னதம்பி 30 ஆண்டு நிறைவு, சின்ன தம்பி திரைப்படம், actor prabhu, non egoistic actor prabhu, பி வாசு, இசைஞானி இளையராஜா, director p vasu, musci ilaiyaraaja, chinna thambi 30 years, நடிகை குஷ்பூ

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படங்களில் ஒன்றான சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதில் ஹீரோயினாக நடித்த குஷ்பூ தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதோடு, சின்னத்தம்பி படத்தில் ஹீரோவாக நடித்த பிரபு பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இயக்குனர் பி.வாசுவின் இயக்கத்தில் இளையராஜா இசையில் நடிகர் பிரபு ஹீரோவாகவும் நடிகை குஷ்பூ ஹீரோயினாகவும் நடித்த சின்னத்தம்பி திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படம். 1991ம் ஆண்டு வெளியான சின்னத்தம்பி திரைப்படம் மிகப்பிரம்மாண்டமான வெற்றி பெற்றது. இளையராஜாவின் இசையில் சின்னத்தம்பி பாடல்கள் அன்றைக்கு பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. இன்றைக்கும் சின்னத்தம்பி திரைப்படத்தின் பாடல்கள் எஃப்.எம்-களில் ஒலிக்காத நாள் இல்லை.

சின்னத் தம்பி திரைப்படம் ரொம்ப எளிமையான கதை வெகுளியாக விவரம் தெரியாமல் வளரும் சின்னத்தம்பி மீது ( பிரபு) பணக்கார வீட்டு பெண்ணான குஷ்பூவுக்கு காதல் ஏற்படுகிறது. இதில் குஷ்பூவின் சகோதரர்கள் ராதாரவி உள்ளிட்டோர் மிகவும் கண்டிப்பான அராஜகமான மனிதர்களாக இருக்கிறார்கள். தடைகளைத் தாண்டி குஷ்பூவும் பிரபுவும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் கதை. இதில், கவுண்டமணியின் நகைச்சுவை இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி ரசிகர்களை சிரிக்க வைக்கின்றன.

சின்னத்தம்பி திரைப்படம் அன்றைக்கு 9 திரையரங்குகளில் 356 நாட்கள் ஓடியது. பல திரையரங்குகளில் 100 நாட்களைத் தாண்டி ஓடியது. பிரபுவுக்கும் குஷ்புவுக்கும் சின்னத்தம்பி திரைப்படம் ஒரு பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. சின்னத் தம்பி படம் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கில் எடுக்கப்பட்டது. அங்கேயும் பிரம்மாண்ட வெற்றி.

அப்படி தமிழ் சினிமா உலகை திரும்பிப் பார்க்க வைத்த சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பது சின்னத்தம்பி திரைப்படம் நினைவுபடுத்தியுள்ளது.

இந்த நிலையில், நடிகை குஷ்பூ சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்துள்ளார். மேலும், அவருடன் நடித்த பிரபு, இயக்குனர் பி.வாசு, தயாரிப்பாளர் கே.பாலு, இசைஞானி இளையராஜா ஆகியோரை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: “சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது என்பதை நம்ப முடியவில்லை. தமிழ் சினிமாவில் இன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரு மாயாஜாலத்தை உருவாக்கிய படம் இது. அது போல அதற்கு முன்பும் சரி அதற்குப் பிறகும் சரி எந்த படமும் அதுபோல வந்ததில்லை. எனது இயக்குனர் பி.வாசு சாருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். நான் நந்தினியாக நடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எனக்குள் இருந்து அதுவரை பார்க்காத நடிப்பை வெளிக்கொண்டுவந்தார்.

க்ளைமாக்ஸில் நன்றாக நடிப்பதற்கு என்னை அனுமதித்த அற்புதமான ஈகோ இல்லாத நடிகராக இருந்ந்த பிரபு சாருக்கு எனது மிகவும் மனமார்ந்த நன்றி. வேறு எந்த நடிகரும் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள்.இந்த படத்தை தயாரித்த எனது தயாரிப்பாளர் மறைந்த கே.பாலு ஒவ்வொரு பாடலையும் புதிய பாடல்களாக அளித்த இசை ஞானி இளையராஜா என்ற மந்திரவாதி. இறுதியாக நீ, என் அருமையான குடும்பம் என்னை ஏற்றுக்கொண்டதற்காக, என்மீது அன்பையும் மரியாதையும் பொழிந்ததற்காக கடமைப்பட்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Kushboo Ilaiyaraja Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment