/tamil-ie/media/media_files/uploads/2020/07/cats-19.jpg)
Kushboo shares her faceapp male version photo : கொரோனா காலத்தில் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரே விஷயம் என்னவென்றால் அது நம்முடைய ஸ்மார்ட்போன் தான். அளவுக்கு அதிகமாக நான் டேட்டாவை செலவிட்டாலும் கூட ஏதோ ஒரு வகையில் நம் உறவுகளுடன் இணைந்திருக்க இது பெரும் உதவியாகவே இருக்கிறது. முகநூல், ட்விட்டர், இன்ஸ்டகிராம் என்பதைக் கடந்தும் சில செயலிகள் நம்மை உற்சாகமாக வைத்திருக்கிறது என்றால் மிகையல்ல.
அதில் மிகவும் முக்கியமான ஒன்று ஃபேஸ் ஆப். ஆண்கள் எல்லாம் பெண்களாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என்றும் பெண்கள் எல்லாம் ஆண்களாய் மாறினால் எப்படி இருப்பார்கள் என்றும் ஃபேஸ்ஆப் வைத்து பிரபலங்கள் புகைப்படங்களை ஷேர் செய்திருந்தார்கள். ஐஸ்வர்யா ராய் முதற்கொண்டு ஆலியாபட் வரை இவர்கள் செய்த அலும்பல்கள் இருக்கின்றதே!
மேலும் படிக்க : 40 நாட்களுக்கு பிறகு தன்னுடைய குழந்தைகளை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்
அதே வரிசையில் தற்போது குஷ்பூ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஃபேஸ்ஆப் மூலம் ஆணாக மாற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தை பதிவு செய்து, ஒரு வேளை நான் ஆணாக இருந்தால், அப்படி ஒன்றும் மோசம் இல்லை என்று கூறியிருந்தார் அவர்.
And if I was a man.. not bad actually..???????????????????????????????????????? pic.twitter.com/mvYK5ob2RV
— KhushbuSundar ❤️ (@khushsundar) July 21, 2020
நீங்க எப்டி இருந்தாலும் அழகு தான் மேம்... அன்று முதல் இன்று வரை இந்த அழகில் மாற்றமே இல்லை என்கிறார்கள் ட்விட்டர்வாசிகள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.