8 வயதில் பாலியல் பலாத்காரம் செய்த தந்தை : நடிகை குஷ்பு பகீர் தகவல்

தன் பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்த மனிதன் என் அப்பா. 8 வயதாக இருக்கும்போது அவர் என்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kushboo

நடிகை குஷ்பு

தான் 8 வயதாக இருக்கும் போது தனது தந்தையே தனக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தார் என்று நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு கூறியிருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

1988-ம் ஆண்டு ரஜினிகாந்த் – பிரபு நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் குஷ்பு. தொடர்ந்து வருஷம் 16, வெற்றி விழா, சின்னத்தம்பி, நாட்டாமை, அண்ணாமலை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். 90-களில் தொடத்தில் இருந்து 2000-ம் ஆண்டு தொடக்கம் வரை ரஜினி, விஜயகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாதமல் இந்தி, தெலுங்கு கன்னடம் மலையாளம் என இந்தியாவின் பல மொழிகளில் நடித்துள்ள குஷ்பு, தி பிரிங் ட்ரெய்ன் என்ற பாலிவுட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 2010-ம் ஆண்டு முதல் அரசியல் பணிகளை மேற்கொண்டு வரும் குஷ்பு, திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது பாஜகவில் வலம் வருகிறார். சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்ட குஷ்பு தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தனக்கு 8 வயதாக இருக்கும்போது தனது தந்தை பாலியல் ரீதியாக தன்தை துஷ்பரயோகம் செய்துவிட்டதாக கூறியுள்ளார். மோஜோ ஸ்டோரிக்காக பர்கா தத்துடனான உரையாடலில் பேசிய குஷ்பு, “ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படும்போது, அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும், அது ஒரு பெண் அல்லது பையனைப் பற்றியது அல்ல. என் அம்மா மிகவும் மோசமான திருமணத்தை உறவை எதிர்கொண்டார்.

Advertisment
Advertisements

தன் மனைவியை அடிப்பதும், குழந்தைகளை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதும் தன் பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்த மனிதன் என் அப்பா. 8 வயதாக இருக்கும்போது அவர் என்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். 15 வயது வரை அவரை எதிர்க்கும் தைரியம் எனக்கு இல்லை. அதன்பிறகு தான் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை வந்தேன். இந்த விஷயம் வெளியில்  மற்ற குடும்ப உறுப்பினர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவார்கள் என்ற பயம் பல ஆண்டுகளாக தனது வாயை மூடிக்கொண்டு இருந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் நான் இது பற்றி சொன்னால்  என்னுடைய அம்மா கூட இதை நம்பாமல் இருக்கலாம் என்ற பயம் இருந்தது. ஆனால் 15 வயதில் என் அப்பாவுக்கு எதிராக செயல்பட தொடங்கினேன். எனக்கு 16 வயது கூட ஆகவில்லை, எங்களிடம் இருந்த அனைத்தையும் விட்டுச் விட்டு அப்பா பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு அடுத்த வேளை உணவுக்காக கஷ்டப்பட்டோம்

அதன்பிறகு கடினமாக காலகட்டத்தில், வாழக்கையில் போராடி மீண்டு வந்தோம். என்று குஷ்பு உணர்ச்சி மிகுதியாக கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: