Advertisment

"பிளாஸ்டிக் சர்ஜரியை அவமானமாக மக்கள் கருதுகிறார்கள்": குஷி கபூர் கருத்து

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதை பொதுமக்கள் அவமானமாக கருதுகிறார்கள் என நடிகை குஷி கபூர் தெரிவித்துள்ளார். மேலும், தான் செய்து கொண்டு அறுவை சிகிச்சைகள் குறித்தும் அவர் மனம் திறந்து கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Kushi Kapoor

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான குஷி கபூர், கடந்த ஆண்டு தான் காஸ்மெடிக் அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனால், சமூக வலைதளங்களில் குஷி கபூரை பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, அவரை 'பிளாஸ்டிக்' எனக் கூறுகின்றனர்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Khushi Kapoor opens up about nose job, lip fillers; reveals she recently had her eyebrows nano-bladed: ‘People think plastic is an insult…’

 

Advertisment
Advertisement

கர்லி டேல்ஸ்-உடன் நடைபெற்ற நேர்காணலில் குஷி கபூர் கலந்து கொண்டார். அப்போது தான் செய்து கொண்ட காஸ்மெடிக் அறுவை சிகிச்சைகள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார். "எனது புருவங்களை நானோ பிளேட் செய்தேன். எனக்கு இயற்கையாகவே மிகவும் அடர்த்தியான புருவங்கள் உள்ளன.  ஆனால் அவற்றில் சில இடைவெளிகளைக் கண்டேன். அதை சரிசெய்யும் சிலவற்றை மேற்கொண்டேன்" எனக் கூறியுள்ளார். 

மேலும், இது போன்ற அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டது குறித்து வெளிப்படையாக கூறுவது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. "அதை ஒரு பெரிய விஷயமாக நான் கருதவில்லை. இது போன்ற அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதை வெளிப்படையாக கூறினால் மக்கள் வெறுத்து விடுவார்களோ என்ற அச்சம் தான் பிரச்சனை. எப்படி இருந்தாலும் வெறுப்பவர்கள் அவர்கள் பணியை செய்வார்கள். அவ்வாறு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களை பிளாஸ்டிக் எனக் கூறி அவமானப்படுத்தி விடலாம் என சிலர் நினைக்கிறார்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.

"ஆனால், அறுவை சிகிச்சைகள் மூலம் தங்களை அழகாக்கிக் கொண்டவர்கள், இயற்கையாகவே தாங்கள் இவ்வாறு தான் இருந்தோம் எனக் கூறுவது தான் பிரச்சனைக்கு வழிவகுக்கும். அப்படி கூறுவதன் மூலம் அழகுக்கான உண்மையற்ற தரத்தை நீங்கள் அமைக்கிறீர்கள். இதை பார்க்கும் இளம் பெண்கள், தங்களுக்கு இது போன்று இல்லையே என கருத தொடங்குவார்கள்" என்றும் குஷி கபூர் தெரிவித்துள்ளார். 

குறிப்பாக, நடிகர்கள் தங்கள் ரசிகர்களிடம் பொய்யான நம்பிக்கைகளைக் கொடுப்பதற்குப் பதிலாக நேர்மையாக இருக்க வேண்டும் என்று குஷி கபூர் கூறியுள்ளார்.

இதே நேர்காணலின் போது தனது உடல் எடை குறைப்பு குறித்து குஷி கபூர் தெரிவித்திருந்தார். "சிறுவயதில் எனது உடல் எடை சற்று அதிகமாக இருந்தது. ஆர்ச்சிஸிற்கான எனது முன் தயாரிப்புகளின் போது, சைக்கிள் ஓட்டுதல், ஸ்கேட்டிங், நீச்சல், நடனம் ஆகியவற்றுக்கு பயிற்சி பெற்றதால் எடை குறைந்தது என நினைக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்வைத் சந்தனின் 'லவ்யபா' படத்தில் அமீர் கானின் மகன் ஜுனைத் கானுடன் குஷி கபூர் நடித்திருக்கிறார். இப்படம் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Janhvi Kapoor Boney Kapoor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment