Kutty Chutties on Sun TV: பெரியவர்களுக்கு என சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வரும் சன் டிவி, ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது. மர்மதேசம், மை டியர் பூதம் உள்ளிட்ட தொடர்களின் மூலம் குழந்தைகளின் ஆதரவைப் பெற்ற சன் தொலைக்காட்சி, ‘குட்டிச் சுட்டீஸ்’ என்ற நிகழ்ச்சியையும் ஒளிபரப்பியது.
Advertisment
வாரம் 4 குழந்தைகள் வீதம் கலந்துக் கொண்டு, அரங்கத்தையே சிரிப்பு வெடியால் அதிர வைக்கும் இந்நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனை இமான் அண்ணாச்சி தொகுத்தி வழங்கினார். பின்னர் அந்நிகழ்ச்சி, சீரியல் பிரபலங்களைக் கொண்டு, ’சீனியர் சுட்டீஸ்’ என்ற பெயரில் தொடர்ந்தது. இந்நிலையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் ‘கல்லா பெட்டி’ என்ற கேம் ஷோ-வை தொகுத்து வழங்கி வருகிறார் அண்ணாச்சி.
இதற்கிடையே, மீண்டும் ‘குட்டிச் சுட்டீஸ்’ நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யவிருக்கிறது சன் தொலைக்காட்சி. இதனை காமெடி நடிகை கோவை சரளா தொகுத்து வழங்க இருக்கிறார். இதன் தேதி அறிவிக்கப்படாத நிலையில், குட்டிச் சுட்டீஸ் ப்ரோமோக்களை வெளியிட்டு, நவம்பர் 10-ம் தேதி மாலை 5.30 முதல் ஒளிபரப்பாகும் என்று குறிப்பிட்டிருக்கிறது சன் டிவி.
Advertisment
Advertisements
கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோருடன் இணைந்து கோவை சரளா நடித்திருக்கும் காமெடி காட்சிகள் எப்போதும் எவர் கிரீன். அவரது உச்சரிப்பும், பாடி லாங்குவேஜும் எவரையும் எளிதாக சிரிக்க வைத்துவிடும். அதோடு, குழந்தைகளுக்குப் பிடித்த காஞ்சனா பட வரிசைகளில் நடித்து, சின்னஞ்சிறுசுகளின் மனதில் ஆழமான இடம் பிடித்துள்ளார் கோவை சரளா. ஆகையால் இவர்களின் காம்போவில் ஒளிபரப்பாகும் குட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சியைக் காண அனைவரும் வெயிட்டிங்!