தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளவர் குட்டி பத்மினி. இவர் டி.வி தொடர்களில் நடித்து வருகிறார். இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய குட்டி பத்மினி விஜயகாந்த் செய்த உதவி குறித்து நெகிழ்ச்சியாக கூறினார்.
அவர் கூறுகையில், "விஜயகாந்த் உடன் படம் நடித்துக் கொண்டிருந்தேன். கணவரை பிரிந்து இருந்தேன். சிரமமான நிலையில் இருந்தேன். என் குழந்தை கீர்த்தனா 3 வயது குழந்தை. அதற்காக தான் மீண்டும் நடிக்கப் போனேன். இல்லை என்றால் சென்றிருக்க மாட்டேன். நாடக சம்பளம் மட்டும் போதவில்லை. குழந்தை வளர்க்க அந்த பணம் போதவில்லை.
விஜயகாந்த் என்னிடம் வீட்டை விட்டு வந்துள்ளாய். பெண் குழந்தை வைத்திருக்கிறார். ஏதாவது ஒரு இடம் வாங்கி நீ தங்க வேண்டும் என்றார். என்னிடம் அதற்கு பணம் இல்லை என்றேன். உடனே விஜயகாந்த் அவருடைய காரை எடுத்து வந்தார். வண்டியில் ஏறு என்று கூறினார். தியாகுவும் இருந்தார்.
ஏ.வி.எம்-ல் இருந்து வளசரவாக்கம் சென்றோம். ஒரு இடத்தை காண்பித்தார். நாங்கள் இங்கு இடம் வாங்குகிறோம். இதில் நீயும் இடம் வாங்க வேண்டும். நான் ஓனரிடம் பேசுகிறேன். மாதம் ரூ.5000 கொடுக்க வேண்டும் என்றார். விஜயகாந்த் சொன்ன வார்த்தையை நம்மி மாதத் தவணையில் எனக்கு வீடு கொடுத்தனர்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“