Sivaji Ganesan | Padmini: பத்மினி, பப்பி, நாட்டியப் பேரொளி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் தான் நடிகை பத்மினி. ‘லலிதா, பத்மினி, ராகினி’ என மூன்று சகோதரிகளுடன் பத்மினி கேரளாவின் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தவர். இந்த 3 சகோதரிகளும் மயில் போல் துள்ளிக்குதித்து ஆட்டம் போட்டு அனைவரையும் கவர்ந்துவிடுவார்கள். மூவரில் பத்மினி தனியாக ஜொலித்தார், அத்துடன் நடிப்பிலும் மின்னினார்.
அவருக்கான திரையுலக அறிமுகமே ’கல்பனா’ எனும் இந்தி படத்தில் தான். அதன்பிறகு 1949-ம் ஆண்டிலேயே ’வாழ்க்கை’, ‘பவளக்கொடி’, ‘சந்திரலேகா’ என வரிசையாக படங்களில் நடித்தார். எம்.ஜி.ஆர், ஜெமினி முதலான எத்தனையோ நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தாலும் ‘சிவாஜி - பத்மினி’ ஜோடியை எல்லோரும் ரசித்ததுடன் கொண்டாடினார்கள்.
சிவாஜியுடன் ‘ராஜாராணி', ‘தங்கப்பதுமை’, தெய்வப்பிறவி’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘வியட்நாம் வீடு’, ‘பேசும் தெய்வம்’, 'இருமலர்கள்’ என 50-க்கும் மேற்பட்ட ஹிட் படங்களில் நடித்து அசத்தினார். இதேபோல், எம்.ஜி.ஆருடன் ‘மன்னாதிமன்னன்’, ‘மதுரை வீரன்’ என்று பல படங்களில் நடித்தார்.
ஜெமினியுடன் நடித்த படங்களிலும் தன் நடிப்பால் ஒருபக்கம் கரவொலி வாங்கினார். நடனத்தால் விசில் சத்தத்தை சம்பாதித்தார். எம்.ஆ.ராதா.வுடன் அவர் நடித்த சித்தி’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் பத்மினியின் நடிப்பைப் பாராட்டாத பத்திரிகைகளே இல்லை எனலாம்.
அழகு ததும்பும் நடிகை, பரதம் தெரிந்த நடிகை, நடிப்பில் பல உணர்ச்சிகளை வெளிக்கொண்டு வரும் நடிகை, எந்தக் கேரக்டராக இருந்தாலும் அதில் தன்னைப் பொருத்திக் கொள்ளும் நடிகை, 8வது அதிசயம்தான் என்றால் பத்மினி என ரசிகர்கள் புகழும் அளவுக்கு எந்த நடிகையும் எட்டாத உச்சத்தை அடைந்தவர். 1932 ஜூன் 12-ம் தேதி பிறந்த பத்மினி, 2006 செப்டம்பர் 24-ம் தேதி காலமானார். நடனம் உள்ளவரை அந்த நாட்டியப் பேரொளி’யை ரசிக்கர்கள் கொண்டாடிக்கொண்டே இருப்பார்கள்.
அத்தகை புகழ் உயரத்தை அடைந்த நடிகையான பத்மினி சினிமா படப்பிடிப்பின் போது கட்டப்பட்ட தாலியை கழற்றாத காரணம் குறித்து நடிகை குட்டி பத்மினி தனது யூடியூப் சேனலில் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "ஒருநாள் சிவாஜி அங்கிள் கமலா அம்மாவை திருமணம் செய்ய ஷூட்டிங் முடிந்தவுடன் கிளம்ப வேண்டியிருந்தது.
அதேநேரத்தில், படப்பிடிப்பு நடந்த இடத்தில் பத்மினி அக்காவுக்கு தாலி கட்டும் காட்சி எடுக்கப்பட்டது. இங்கே தாலி கட்டுக்கும் காட்சிக்குப் பிறகு, உண்மையில் வாழ்க்கையில் தாலி கட்ட சுவாமி மலைக்கு போகிறார். ஆனால், பப்பிமா பொறுத்தவரைக்கும் அவங்களுக்கு அந்த தாலியை கழற்றவே பிடிக்கவில்லை. அந்த தாலியை மணிரத்தனம் படத்தில் வரும் நடிகை ஷாலினி தாலியை தனது ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்திருந்தது போல் அவரும் பல மாதங்கள் மறைத்து வைத்து இருந்தார்.
அப்போது ராகினி அக்கா அதை கண்டுபிடித்து பத்மினி அக்கா அம்மாகிட்ட சொல்ல, அப்பறம் ஒரே ரகளை நடந்தது. அவங்க அம்மா சத்தம் போட்டதனால் அந்த தாலியை கழற்றி விட்டார்கள். அவங்க கழுத்துல இருந்த தாலியைத் தான் எடுத்தாங்களே தவிர, தன் மனதில் இருந்த சிவாஜி கணேசனை கடைசி வரை அவங்க எடுக்கவில்லை" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.