தமிழர்களின் வாழ்க்கையையும் பாட்டையும் எப்படி பிரிக்க முடியாதோ, தமிழ் இலக்கியங்களையும் பாடல்களையும் பிரிக்க முடியாதோ, அதே போல, தமிழர்களின் நவீன கலாச்சாரமாக மாறிபோயுள்ள சினிமாவையும் பாடலையும் பிரிக்க முடியாது.
அதனால், சினிமா பாடல்கள் அனைத்தும் நல்ல பாடல்கள் என்றோ எல்லா பாடல்களும் மோசமான பாடல்கள் என்றோ கூறிவிட முடியாது. ஒரு பாடலை நல்ல பாடல் என்று அந்த பாடலின் இசை, அது பாடப்படும் முறை, பாடலி கருத்து, குரல், என எல்லாமும் சேர்ந்ததுதான்.
அந்த வகையில், சிறந்த கவிஞர்கள் கூட அந்த படத்தில், அந்த படத்தின் சூழ்நிலைக்கு அப்போதைய மனநிலையில், உணர்வெழுச்சியில், எழுதப்படும் பாடல்கள், சில நேரங்களில் இரட்டை அர்த்த பாடல்களாக அமைந்துவிடுவதுண்டு. இதற்கு கவிஞர் கண்ணதாசனும் விதிவிலக்கல்ல. அப்படி, கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு டபுள் மீனிங் பாடலை தான் எழுதியிருக்கக்கூடாது என்கிற விதமாக அது ரத்தத்தின் கோளாறு வயது வயது ஆக எல்லாம் மாறுகிறது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
கவிஞர் கண்ணதாசனை வைத்து புதுவிதமாக ஒரு நிகழ்ச்சி நடத்த விரும்பிய வானொலி நிலையம், 1974 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர்களை கேள்வி கேட்க வைத்து அதற்கு கவிஞர் கண்ணதாசன் பதிலளிக்கும் விதமாக நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தனர்.
அந்த நிகழ்ச்சியில் ஒரு மாணவி, “உங்களைப் பொருத்தவரை பணத்துக்காகவோ, புகழுக்காகவோ பாட்டு எழுத வேண்டிய அவசியமில்லை. அப்படி இருக்கும்போது, இலந்தம் பழம் போன்ற டபுள் மீனிங் பாடல்களை எழுதுகிறீர்கள்” என்று ஒரு மாணவி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு, கவிஞர் கண்ணதாசன், படத்தில் வருகிற ஒரு கேரக்டர், இலந்தம் பழம் விற்றால், இலந்தம் பழம் எழுத வேண்டியிருக்கிறது, வேர்க்கடலை விற்றால் வேர்க்கடலை எழுத வேண்டியிருக்கிறது. அவளுக்கு தத்துவப் பாடல் எழுத முடியாது. இரண்டு அர்த்தம் வரமாதிரி அன்றைக்கு எழுதியிருக்க வேண்டாம், ஆனால், அந்த நேரத்து உணர்ச்சிகள் எப்படி என்றால், இப்போதைக்கும் அப்போதைக்கும் வித்தியாசம் இருக்கிறது. 5 வருஷத்துக்கு இடையில் மாற்றங்கள் இருக்கும். அதற்கு முன்னால் எல்லாம், ஒரு கடவுள் பாட்டு எழுதினால்கூட கொஞ்சம் செக்ஸ் வரும். எல்லாரும் கடவுள் பாட்டில்கூட செக்ஸ் எழுதுகிறீர்களே என்று கேட்பார்கள். அது ரத்தத்தினுடைய கோளாறே தவிர, அது அந்தந்த காலத்தினுடைய கோளாறு. அது வயதுடைய கோளாறு. வயது ஆக ஆகத்தான் எல்லாம் மாறுது” என்று கவிஞர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“