Advertisment
Presenting Partner
Desktop GIF

தமிழ் மக்களை இழிவுபடுத்திய லால் சலாம் நாயகி : வைரலாகும் பழைய பதிவுகள் : படத்திற்கு பின்னடைவா?

லால் சலாம் படத்தில் நடித்துள்ள தன்யா பாலகிருஷ்ணனின் சென்னை மக்களை விமர்சித்து வெளியிட்ட பழைய ஃபேஸ்புக் பதிவு, லால் சலாம் ரிலீஸுக்கு முன்னதாக மீண்டும் வெளிவந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Dhanya Balakrishnan Laal Salam

தன்யா பாலகிருஷ்ணா லால் சலாம் படத்தில் நடித்துள்ளார்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

லால் சலாம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை தன்யா பாலகிருஷ்ணன், தமிழ் மக்கள் பற்றி ஏற்கனவே வெளியிட்டிருந்த சர்ச்சை கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருவது படத்திற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்ய ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஆனாலும் தற்போது இந்த படம் ரஜினிகாந்த் படம் என்றே ப்ரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

லால் சலாம் படம் வரும் பிப்ரவரி 9-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதனிடையே இந்த படத்தில் முக்கிய கேரக்டரில நடித்துள்ள நடிகை, தன்யா பாலகிருஷ்ணா, தமிழ் மக்களைப் பற்றி இழிவாக பேசிய பல ட்விட்டர் பதிவுகள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருவது படத்திற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 2012-ம் ஆண்டு வெளியான இந்த பதிவுகள் தற்போது நீக்கப்பட்டிருந்தாலும், தன்யா பாலகிருஷ்ணாவின் பேஸ்புக் பதிவின் ஸ்கிரீன் ஷாட்கள் ஆன்லைனில் மீண்டும் வெளிவந்துள்ளன.

கடந்த 2012-ம் ஆண்டு ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றபோது, சென்னை மக்கள் பெங்களூரு மக்களின் தயவில் வாழ்கிறார்கள் என்று தன்யா பேஸ்புக்கில் ஒரு சர்ச்சையாக பதிவை வெளியிட்டிருந்தார். பெங்களூருவிடம் தண்ணீர் மற்றும் மின்சாரத்திற்காக சென்னை மக்கள் (தமிழர்கள்) பிச்சை எடுப்பதாக கூறிய அவர், சென்னைவாசிகள் கர்நாடக தலைநகருக்கு வந்து அசுத்தமாக்குகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

தற்போது இந்த பதிவுகள் வெளியாகி இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால் தன்யாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 7-ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தன்யா, அடுத்து காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி, கார்பன் மற்றும் யார் இவன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2022-ம் ஆண்டு விதார்த்துடன் கார்பன் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தற்போது லால் சலாம் படத்தில் நடித்துள்ளார்.

லால் சலாம் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக தன்யாவின் பழைய கருத்துகள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழர்கள் குறித்து இவ்வளவு மோசமான கருத்துகளைக் கூறிய ஒருவரை தமிழ் படத்தில் நடிக்க வைத்தது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment