Advertisment

97-வது ஆஸ்கார் விருது: இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக 'லாபட்டா லேடீஸ்'; பட்டியலில் வந்த தமிழ் படங்கள் என்னென்ன?

97வது ஆஸ்கார் விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படமாக, கிரண் ராவ் இயக்கி அமீர் கான் தயாரித்த லாபட்டா லேடீஸ் படம் தேர்வாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Oscar Award Laapataa Ladies

சிறந்த வெளிநாட்டு படம் என்ற வரிசையில், ஆஸ்காருக்கு அனுப்புவதற்கான இந்திய படமாக லாப்பட்டா லேடீஸ் என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தி ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Read In English: Laapataa Ladies is India’s official entry to Oscars 2025; trumps Animal, Aattam and All We Imagine As Light

இந்தியாவில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான படங்கள் வெளியானாலும், குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே சிறந்த கதையம்சம் கொண்ட படங்களாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த குறிப்பிட்ட சில படங்களை ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் வகையில் தற்போது பாலிவுட் சினிமாவில் ஒரு படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கடந்த 2023-ம் ஆண்டு அமீர்கானின் முன்னாள் மனைவி, கிரன் ராவ் இயக்கத்தில் வெளியான லாப்பட்டா லேடீஸ் படம் தற்போது ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் இந்திய திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில், 97வது அகாடமி விருதுகளில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட வரிசையில், இந்தியாவில் சார்பில் லாப்பட்டா லேடீஸ் திரைப்படம் பரிந்துரை செய்யப்படுவதாக,  தி ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா உறுப்பினர்கள், அறிவித்துள்ளனர்.

கிரண் ராவ் இயக்கிய இந்தப் படத்தை, அமீர் கான் தயாரித்திருந்தார். இரண்டு இளம் புதுமணத் தம்பதிகள் ரயிலில் பயணம் செய்யும்போது தவறுதாலாக மணப்பெண்கள் இடம் மாறிவிடுவார்கள். இதனால் அடுத்து என்ன நடக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில், இப்படத்தில் பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் நிதான்ஷி கோயல் ஆகியோர் நடித்திருந்தனர்.

லாப்பட்டா லேடீஸ் படத்துடன் சேர்ந்து, ஹனு மேன், கல்கி 2898 கி.பி., அனிமல், சந்து சாம்பியன், சாம் பகதூர், சுதந்திர வீர் சாவர்க்கர், குட் லக், காரத் கணபதி, மைதான், ஜோரம், கொட்டுக்காளி, ஜமா, ஆர்ட்டிகல் 370, ஆட்டம், ஆகிய 29 படங்கள் இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ் படங்களான தங்கலான், வாழை, கொட்டுக்காளி, மலையாள படமாக உள்ளொழுக்கு மற்றும் இந்தி படமாக ஸ்ரீகாந்த், ஆகிய படங்களும் பட்டியலில் இணைந்துள்ளதாக ஜூரி உறுப்பினர்களை இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் ரவி கொட்டாரகர தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஜூட் அந்தனி ஜோசப்  இயக்கிய மலையாள திரைப்படமான  2018, ஆஸ்கார் விருது இறுதிப்பட்டியலில் இடம் பெறவில்லை. அதே சமயம், ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டுப் பாடல், சிறந்த அசல் பாடலுக்கான ஆஸ்கார் விருதை வென்றிருந்தது. சிறந்த ஆவணப்படம் (குறுகிய) பிரிவில் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்காவின் ஆவணப்படமான தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் வென்றது.

ஷானக் சென்னின் ஆல் தட் ப்ரீத்ஸ் சிறந்த ஆவணப்படத்தின் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளோம். 74வது அகாடமி விருதுகளில் நோ மேன்ஸ் லேண்டிடம் தோல்வியடைந்த அமீர் கான்-அசுதோஷ் கோவாரிக்கரின் கூட்டணியில் வெளியான லகான் (2001) இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த கடைசி இந்தியத் திரைப்படமாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Oscar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment