Advertisment
Presenting Partner
Desktop GIF

சினிமா, காதல், தோல்வி, திருமணம்… லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வாழ்க்கை பயணம்

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா இதுவரை சினி உலகிலும் சுய வாழ்க்கையிலும் கடந்து வந்த பாதை பற்றி பார்ப்போம். நடிகை முதல் அம்மா வரை லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாராவின் வாழ்க்கை பயணம்..

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nayanthara

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு

லேடி சூப்பர் ஸ்டார் என்கிற நயன்தாரா தென்னிந்திய நடிகை ஆவார், இவர் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். சந்திரமுகி, கஜினி, பில்லா மற்றும் யாரடி நீ மோகினி போன்ற படங்களுக்கு பிறகு திரையுலகில் பிரபலமானவராக வலம் வந்தார்.

Advertisment

nayanthara

நயன்தாரா நவம்பர் 18, 1984 அன்று கேரளாவின் திருவல்லாவில் ஒரு ஆர்த்தடாக்ஸ் சிரியன் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை விமானப்படை அதிகாரியாக இருந்ததால், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.

திருவல்லாவில் உள்ள பாலிகாமடம் உயர்நிலைப் பள்ளியில் +2 படித்தார், பின்னர் திருவல்லாவில் உள்ள மார்த்தோமா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 

கல்லூரி நாட்களில் நயன்தாரா பகுதி நேரமாக மாடலிங் செய்து வந்தார். டயானா மரியம் குரியன் என்பது அவருடைய இயற்பெயர். சென்னை ஆரிய சமாஜம் கோவிலில் நயன்தாரா இந்து மதத்தை ஏற்றுக்கொண்டார். 

nayanthara 2

நடிகர் சிம்புவை காதலிப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில்  நவம்பர் 2006 இல், தானும் சிலம்பரசனும் பிரிந்துவிட்டதை அவர் உறுதிப்படுத்தினார், மேலும் அவருடன் மீண்டும் பணியாற்றப் போவதில்லை என்றும் கூறினார்.

மேலும்  2008 ஆம் ஆண்டில், வில்லு படம் வெளியான பிறகு, பிரபு தேவாவை நயந்தாரா காதலிப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகின.  செப்டம்பர் 2010 இல்,   நயன்தாராவுடனான தனது காதலை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட தேவா விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறினார்.

இருப்பினும் நயன்தாரா 2012-ம் ஆண்டு பிரபுதேவாவுடனான காதலை முறித்துக் கொண்டதாக அறிவித்தார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் ஒன்றாக பணியாற்றியதிலிருந்து காதலித்து வந்ததாக பின்னர் பேசப்பட்டது.

nayanthara 3

இவர்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. அக்டோபர் 20, 2022 அன்று, விக்னேஷ் சிவன் நயந்தாரா தம்பதியினர் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளதாக அறிவித்தனர்.

nayanthara

2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை நயன்தாரா சுமார் 75 படங்களில் நடித்துள்ளார். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு நெட்ஃபிலிக்ஸில் நயன்தாரா பியாண்ட் த பேரிடேல் என்ற ஆவணப்படம் வெளியாகி உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Birth Day Nayanthanra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment