இளம் வயதில் திருமணம், இது டைவர்ஸ் ஆகிடும்னு சொன்னாங்க; ஆனா நடந்தது வேற: கல்யாண வாழ்க்கை பற்றி மனம் திறந்த லேடி சூப்பர் ஸ்டார்!

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் விஜயசாந்தியின் திருமண வாழ்க்கை குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் விஜயசாந்தியின் திருமண வாழ்க்கை குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
vijayasanthi

தென்னிந்திய திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவரான விஜயசாந்தி, 1980 மற்றும் 90களில் தனது அதிரடி நடிப்பு மற்றும் கவர்ச்சியான தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்தார். ஆரம்பத்தில் துணை நடிகையாக தனது பயணத்தைத் தொடங்கிய இவர், பின்னர் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். ரஜினிகாந்துடன் 'மன்னன்' போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், தெலுங்கு திரையுலகில் இவர் பெற்ற புகழ் அளப்பரியது.

Advertisment

குறிப்பாக, ‘போலீஸ் லாக்கப்’ மற்றும் ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’ போன்ற அதிரடித் திரைப்படங்களில் பெண் காவல்துறை அதிகாரியாக நடித்ததன் மூலம், இவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படலானார். அன்றைய சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் ஆகியோருக்கு இணையாக தனி ஒரு பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். இந்நிலையில் அவர் அவள் விகடனுக்கு அளித்த பேட்டியில் தனது திருமண வாழ்க்கை குறித்து கூறியுள்ளார்.

தங்கள் திருமணம் மிகவும் எளிமையாக, எந்த ஆடம்பரமும் இல்லாமல் நடந்ததாகவும், இதுவே தங்களுக்குப் பிடித்திருந்தது என்றும் கூறினார்.  விஜயசாந்தி மற்றும் அவரது கணவரின் காதல் பயணம் மிக வேகமாக வளர்ந்தது. ஆறு முதல் ஏழு மாதங்களுக்குள் எல்லாம் முடிவாகி, திருமணம் நடைபெற்றது. இதை அவர் "சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நல்ல முடிவு" என்று கருதுகிறார். விஜயசாந்தியின் கணவர், அவரது சினிமா வாழ்க்கையைத் தொடர்ந்து செயல்பட முழு ஆதரவு கொடுத்தார். தனது கணவரின் ஆதரவு இல்லையென்றால், தொடர்ந்து நடிப்பது சாத்தியமில்லை என்று அவர் வெளிப்படையாகக் கூறினார். 

தங்கள் திருமண வாழ்க்கையில் பரஸ்பர புரிதல், ஒருவருக்கொருவர் மனநிலையைப் புரிந்துகொள்வது மற்றும் ஈகோ இல்லாமல் இருப்பது ஆகியவை வெற்றிக்கான முக்கிய காரணங்கள் என்று அவர் நம்புகிறார். கணவரின் ஆதரவால் தான் தொடர்ந்து வெற்றிகரமான நடிகையாக இருக்க முடிந்தது என்பதைக் குறிப்பிடும் அவர், தனது கணவரின் பேனர் தயாரித்த படம் தான் தனக்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக அந்தஸ்தைக் கொடுத்தது என்றும் கூறினார். இந்த காரணங்களால்தான், விவாகரத்து ஏற்படும் என்று பலர் சொன்னாலும், தங்கள் திருமண வாழ்க்கை உறுதியாக நின்றதாக அவர் தெரிவித்தார். 

Advertisment
Advertisements

vijayasanthi

விஜயசாந்தி தனது தந்தையை 15 வயதில் இழந்தார். அதன் பிறகு ஒரு வருடத்திற்குள் தனது தாயையும் இழந்ததால், இளம் வயதிலேயே வாழ்க்கைக்கு பொறுப்பேற்றுக்கொண்டார். ஆரம்பகாலத்தில், ஒரு நாளைக்கு ஆறு ஷிப்டுகளில் 17 படங்கள் வரை நடித்து உடல் சோர்வு அடைந்ததாகவும், அப்போது கேரவன் போன்ற வசதிகள் இல்லாததால் வெளிப்புற படப்பிடிப்புகளின்போது செடிகளுக்குப் பின்னால் உடை மாற்றிக்கொண்டதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.

ஒரு வெற்றிகரமான திருமணத்திற்கு பரஸ்பர புரிதல் மற்றும் ஈகோ இல்லாதது அவசியம் என்றும், ஒருவருக்கொருவர் மனநிலையை சமநிலைப்படுத்துவது முக்கியம் என்றும் அவர் கூறுகிறார். வாழ்க்கையில் வந்த கஷ்டங்கள் பணத்தின் மதிப்பையும், வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதையும் அவருக்குக் கற்றுக்கொடுத்தது. சவால்களை எதிர்கொள்ள பயப்படக்கூடாது என்பதே அவரது தத்துவம், பெரிய பிரச்சனைகள் மழையாக வந்தாலும், அதை எதிர்கொள்ள மனதளவில் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். தனது மன அமைதி தனது வேலை மற்றும் ரசிகர்களின் அன்பிலிருந்தே வருவதாக அவர் தெரிவித்தார்.

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: