குறுகிய இடைவெளிக்குப் பிறகு, நடிகை லட்சுமி மேனன் மீண்டும் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடுவது மற்றும் புதிய போட்டோஷூட் படங்களை பகிர்வது என படு பிஸியாக உள்ளார். அதோடு எடையைக் குறைத்து, ஸ்லிம்மாக மாறியிருக்கும் லட்சுமி மேனன், புதிய பட வாய்ப்புகளை எதிர் நோக்கி காத்திருக்கிறார்.
’டெல்லி பறித்ததை திரும்பப் பெறுவோம்’ விடுதலையானார் மெஹபூபா முஃப்தி!
இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடனான சமீபத்திய உரையாடலில், லட்சுமி மேனன் தன்னைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படுத்தினார். ரசிகர்கள் எழுப்பிய பிரபலமான கேள்விகளில் ஒன்று, அவர் சிங்கிளா என்பது தான். அதற்கு எந்தவொரு ரகசிய பதில்களையும் கொடுக்காமல், ‘இல்லை’ எனக் கூறி, ஒரு ‘கூச்ச சுபாவமுள்ள’ gif-ஐ சேர்த்திருந்தார். இதனால் லட்சுமி மேனன் யாருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் திருமணத்தை நம்புகிறாரா என்ற மற்றொரு கேள்வி எழுந்தது.. அதற்கு அவர், “மிகைப்படுத்தப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.
CSK IS BACK : தலைதெறிக்க ஓடிய ஹைதராபாத் அணி…ரசிகர்கள் கொண்டாட்டம்!
மற்ற சுவாரஸ்யமான பதில்களில், தான் நடித்த படங்களிலேயே ‘ஜிகார்த்தண்டா’ தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் கூறினார். தனுஷ் தனக்கு பிடித்த தமிழ் நடிகர் என்ற அவர், தனது எடை இழப்பு பயணத்தில், நடனம் தனக்கு நிறைய உதவியது என்றார். “நடனம் எனக்கு இறுதியில் எடையைக் குறைக்க உதவியது. ஆனால் நடனம் எடை இழப்புக்கு அல்ல. சில பயிற்சிகள் எடையைக் குறைப்பதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் மிகவும் உதவும்” என்றார் லட்சுமி மேனன்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”