16- வயதில் நிச்சயம், 18-ல் திருமணம்; 45 வயதில் என்னை பார்த்து பிரபல நடிகர் சொன்ன வார்த்தை: லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டம்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் கூறிய கருத்துகளை தவறாக புரிந்து கொண்டு, அதனை செய்தியாக பரப்புவது நாகரிகமற்றது என்று நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் கூறிய கருத்துகளை தவறாக புரிந்து கொண்டு, அதனை செய்தியாக பரப்புவது நாகரிகமற்றது என்று நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Lakshmi Ramakrishnan

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் குறித்து தான் நினைவு கூர்ந்த சம்பவத்தை, சிலர் தவறாக புரிந்து கொண்டு அதனை செய்தியாக பரப்புவதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

கேரளாவை பூர்வீகமாக கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன், தமிழில் பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இது தவிர ஆரோகணம் என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குநராகவும் தன்னை நிரூபித்துள்ளார். முன்னதாக, கரு. பழனியப்பன் இயக்கத்தில் சேரன், சினேகா ஆகியோர் நடிப்பில் வெளியான பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இதைத் தொடர்ந்து, பொய் சொல்ல போறோம், ஈரம், எல்லாம் அவன் செயல், நாடோடிகள், நான் மகான் அல்ல என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, மிஷ்கின் இயக்கத்தில் உருவான யுத்தம் செய் திரைப்படத்தில், இவரது மாறுபட்ட நடிப்பு விமர்சகர்கள் இடையே பாராட்டுகளை பெற்றுத் தந்தது. தமிழில் பல முன்னணி இயக்குநர்களுடனும், லட்சுமி ராமகிருஷ்ணன் பணியாற்றியுள்ளார்.

சின்னத்திரையில் இவர் தொகுத்து வழங்கிய சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி, மேலும் பல பார்வையாளர்களிடம் இவரை கொண்டு சேர்த்தது. குறிப்பாக, கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி, சுமார் 1,500 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்நிலையில், தற்போது விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியிலும் லட்சுமி ராமகிருஷ்ணன் பங்கேற்றுள்ளார்.

Advertisment
Advertisements

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறிய தகவல், பலரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த வகையில், கல்லூரி நாட்களில் இருந்து கமல்ஹாசனை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார். குறிப்பாக, கமல்ஹாசனை காதலித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு முறை கமல்ஹாசனை சந்திக்க வாய்ப்பு கிடைத்த போது, தனது விருப்பத்தை அவரிடம் கூறுவதற்கு முயன்றதாகவும், ஆனால் கமல்ஹாசன் தன்னை பார்த்து தங்கச்சி என்று அழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் கூறிய இந்த தகவல் பல ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்தக் கருத்து தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை அவர் அளித்துள்ளார். அதன்படி, "நான் 16ஆம் வயதில் நிச்சயதார்த்தம் செய்து, 18ஆம் வயதில் திருமணம் செய்தேன். 42வது வயதுவரை எனக்கு சினிமா உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை. மற்ற பலர்போலவே, நான் நட்சத்திரங்களை ஒரு ரசிகையாகவும், குழந்தைபோன்ற ஆச்சரியத்துடனும் பார்த்தவள்தான். 

 

 

45வது வயதில் ஒரு பிரபல நடிகரை நேரில் சந்தித்தபோது, உண்மையிலேயே star-struck ஆகிவிட்டேன். அவர் என்னைப் பார்த்து, “என் சகோதரி மாதிரி இருக்கிறீர்கள்” என்று சொன்னதும், என் நண்பர்கள் நகைச்சுவையாக கலாய்த்தார்கள். இதைத்தான் நான் குக்கு வித் கோமாளியில் நன்றாக ரசித்து பகிர்ந்தேன். இதை தவறாக புரிந்து, செய்தியாக மாற்றி பரப்புவது நியாயமற்றதுமே அல்லாமல், மிகுந்த நாகரிகமற்றதும்கூட" என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Cook With Comali

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: