/tamil-ie/media/media_files/uploads/2019/03/Solvathellam-Unmai.jpg)
Solvathellam Unmai, சொல்வதெல்லாம் உண்மை
சொல்வதெல்லாம் உண்மை... அதிகமாக பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இதனை தொகுத்து வழங்கியவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகை, பேச்சாளர் என பன்முக திறமை கொண்ட நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.இவர் ஜீ தமிழில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்ட ஒன்றாக இருந்து வந்தது.
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி வதந்திக்கு முற்றுப்புள்ளி
பின்னர் அந்த நிகழ்ச்சி மீது நடந்த வழக்கின் காரணமாக தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக லட்சுமி ராமகிருஷ்ணனும் விளக்கங்கள் கொடுத்திருந்தார். தற்போது புதியதாக ஒரு வதந்தி வேகமாக பரவியது. அதில் சொல்வதெல்லாம் உண்மையை மீண்டும் வேரு சேனலில் லட்சுமி நடத்தப் போவதாக கூறப்பட்டது.
There is a rumour that I have signed up to do #Sollvathellamunmai for another channel, i clarify that I will not be hosting #SU for any other channel. I did my best for the show & it is over, wonderful tenure with @ZeeTamil ???? am approached by other channels but will not do #SU
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki)
There is a rumour that I have signed up to do #Sollvathellamunmai for another channel, i clarify that I will not be hosting #SU for any other channel. I did my best for the show & it is over, wonderful tenure with @ZeeTamil ???? am approached by other channels but will not do #SU
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) March 9, 2019
அனால் அது உண்மையில்லை என்றும், பல சேனல்கள் தம்மை இந்த நிகழ்ச்சிக்காக அணுகினார்கள் ஆனால் நான் முடியாது என்று கூறிவிட்டேன். இனி ‘சொல்வதெல்லாம் உண்மை’ கிடையாது என்று டுவிட்டர் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.