/tamil-ie/media/media_files/uploads/2022/08/1-390-1024x606-1.jpg)
இயக்குநர் மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இளைய ராஜாவை சந்திக்கும்போது தரையில் அமர்ந்திருந்தது தொடர்பாக பதிலளித்துள்ளார்.
சீ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஓளிபரப்பான ’சொல்வதெல்லாம் உண்மை’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் லட்சிமி ராமகிருஷ்ணன். குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் சமூக ரீதியில் பின்தங்கிய மனிதர்களின் உறவுச் சிக்கலை வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தபட்டது என்ற விமர்சனங்கள் எழுந்தது. மேலும் இது உளவியல் ரீதியான பிரச்சனைகளை பலருக்கு ஏற்படுத்துகிறது என்றும் கூறப்பட்டது. இருப்பினும் இந்த நிகழ்ச்சி அதிக பிரபலமானது. “ போலிஸ்ல புடிச்சு கொடுங்க சார் இவன, என்னமா இப்படி பன்னுரேங்களேமா, நல்ல வளர்த்துருக்கீங்க பிள்ளைய “ போன்ற இவரது வசனங்கள் மீம்ஸ், ரீல்ஸாக படும் வைராகியது. தற்போது வைராகி வருகிறது. இந்நிலையில் இவர் முக்கியான படங்களையும் இயக்கி உள்ளார். இவர் இயக்கிய ’ஹவுஸ் ஓனர்’ திரைப்படம் முக்கிய விவாதங்களை எழுப்பியது. மேலும் இவர் மேல்தட்டு வர்க அரசியலை தூக்கிபிடிக்கிறார் என்ற விமர்சனமும் இவர் மீது சுமத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது இவர் இயக்க உள்ள புது படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜ இசையமைக்கிறார். அப்போது அவரை பார்க்க லட்சிமி ராமகிருஷ்ணன் சென்றபோது, அவர் தரையில அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்ருந்தார்.
இந்நிலையில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது, தன்னை சந்திக்க வரும் விருந்தினருக்கு, நாற்காலி கொடுக்கும் அளவிற்கு இளையரஜாவிடம் பணம் இல்லையா ? என்றும் அனைவரையும் சமமாக நடத்துங்கள் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன். ”இளையராஜா கடவுள் போன்றவர். அவர் பாதத்தின் அடியில் அமர்வது எனக்கு கிடைத்த பாக்கியம். தரையில் அமர்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது” என்று அவர் பதிலளித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.