New Update
/
தொகுப்பாளரும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது புதிய ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை ‘ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்றார். இவரின் 'என்னமா நீங்க இப்படி பண்றீங்களே மா' என்ற வார்த்தைகள் மீம்ஸ்களாகவும், நகைச்சுவையாகவும் இன்றும் சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது.
இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாது, சில படங்களில் நடித்துள்ளார், திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். சமூக ஆர்வலராகவும் உள்ளனர். இவர் முதன்முதலாக 2012-ம் ஆண்டில் வெளிவந்த ஆரோகணம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு, நெருங்கி வா முத்தமிடாதே, அம்மானி, ஹவுஸ் ஓனர் போன்ற பல படங்களை இயக்கி உள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இந்நிலையில், தனது ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்ட பதிவில், "இந்த புதிய ஹேர் ஸ்டைலை நான் முயற்சித்தேன். இதை செட் செய்ய சில மணி நேரங்கள் தான் ஆகிறது. பராமரிக்கவும் எளிதாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இவரின் புதிய லுக்கிற்கு பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். நக்மா, ரேவதி கலந்த லுக்கில் உள்ளீர்கள். இந்த ஹேர் ஸ்டைல் உங்களுக்கு அழகாக உள்ளது. Beautiful எனப் பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.