Advertisment

உண்மையை தெரிந்துக் கொண்டாரா மகாலட்சுமி? பதற்றத்தில் சாந்தி

அவரின் கணவர், மருத்துவரிடம் சென்று உண்மையை மறைக்கும்படி வேண்டுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lakshmi Stores today

Lakshmi Stores today

Lakshmi Stores today : சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் லக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியல் இரவு நேரங்களில் உங்கள் இல்லங்களை இனிமையாக்க வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.

Advertisment

Lakshmi Stores promo: தனது மகள் மகா தன்னுடைய மகள் தானா என்ற சந்தேகம் மகா லட்சுமிக்கு வந்து விட்டது. இதை உறுதிப்படுத்த ப்ளட் டெஸ்ட் உட்பட சில ரிப்போட்டுக்களை எடுத்துக் கொண்டு பிரசவம் நடந்த மருத்துவமனைக்கு செல்கிறார் மகா லட்சுமி. ஆனால் இந்த உண்மை எப்படியோ முன் கூட்டியே தெரிந்துக் கொண்ட அவரின் கணவர், மருத்துவரிடம் சென்று உண்மையை மறைக்கும்படி வேண்டுகிறார்.

அவரின் கோரிக்கையை மறுக்க முடியாத டாக்டர், மீண்டும் ஒருமுறை மகா லட்சுமியிடம் பொய் சொல்லி விடுகிறார். சந்தோஷத்தில் மகா லட்சுமி வெளியே வர, அவரின் நீண்ட நாள் தோழியான சாந்தியை மருத்துவமனையில் சந்திக்கிறார் மகா. மகாவுக்கு உண்மை தெரிந்து விட்டதா? என்ற பதற்றத்தில் திணறி நிற்கிறார் சாந்தி.

kanmani promo:

கண்ணணுக்கும், கண்மணிக்கும் திருமணம் என்பது உறுதியாகி விட்டது. பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு இந்த திருமணம் நடக்க இருக்கிறது. கண்மனியின் அத்தை கிருஷ்ணவேணி செய்த அனைத்து சதி திட்டங்களையும் முறியடித்து நடக்கவிருக்கும் கண்மனி - கண்ணன் திருமணத்திற்கு சிறப்பு அழைப்பும் வந்துள்ளது.

கண்மனி, கண்ணன் திருமணம் நடக்க இருக்கும் இதே நேரத்தில் தான் ஆகாஷை திருமணம் செய்ய போகும் பெண்ணும், கண்மனியிடம் வந்து பிரச்சனை செய்கிறார். ஆகாஷை அவர் திருமணம் செய்வாரா? என்ற கேள்வி தான் இப்போது அனைவரின் பக்கமும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment