'நீங்க உங்க வேலைய பாருங்க’: லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்துக்கு வனிதா ’பளீர்’ பதில்

தங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், ஏழு ஆண்டுகளாக பிரிந்து இருப்பதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Vanitha Vijayakumar Wedding: மூத்த நடிகர்கள் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளும் நடிகையுமான வனிதா விஜயகுமார் கடந்த 27-ம் தேதி பீட்டர் பால் என்பவரை மணந்தார். பொது முடக்கம் அமலில் இருக்கும் இந்த நேரத்தில் பெரிய கொண்டாட்டங்கள் இல்லாமல் நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் மத்தியில் வீட்டிலேயே இந்தத் திருமணம் நடைபெற்றது.

விபத்து, எலும்பு முறிவு..! கொல்லங்குடி கருப்பாயி எப்படி இருக்கிறார்?

இதற்கிடையே, தன்னை விவாகரத்து செய்யாமல், மறுமணம் செய்துக் கொண்டதாக, பீட்டர் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி போலீஸ் ஸ்டேஷனில், புகார் அளித்துள்ளார். மேலும், தங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், ஏழு ஆண்டுகளாக பிரிந்து இருப்பதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பேரூராட்சி அலுவலகத்தில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்: செயல் அலுவலர் பணியிடை நீக்கம்

இந்த விஷயம் குறித்து, பிரபல நடிகையும் சமூக ஆர்வலருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “நான் இப்போதுதான் செய்திகளைப் பார்த்தேன். அந்த மனிதன் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளைப் பெற்றவர், விவாகரத்தும் செய்யவில்லை. நன்கு படித்த ஒருவர் எப்படி இப்படி ஒரு தவறை செய்திருக்க முடியும்..? அதே போல ஏன் அந்த முதல் மனைவி இவர்களுடைய திருமணத்தை நிறுத்த முற்படவில்லை..?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள நடிகை வனிதா விஜயகுமார், “இந்த உலக மிகவும் சிறியது, நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்” என்று அவர் பதில் அளித்துள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close