ரஜினிகாந்த் சங்கி இல்லை; அப்பாவ அப்படி சொல்லும் போது கோபம் வரும்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

அப்படி இருந்திருந்தா அவர் லால் சலாம் படத்துல நடிச்சு இருக்க முடியாது. ஏனெனில், இது மனித நேயம் மிக்க உள்ளம் கொண்டவரால் மட்டும் தான் நடிக்க முடியும்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

அப்படி இருந்திருந்தா அவர் லால் சலாம் படத்துல நடிச்சு இருக்க முடியாது. ஏனெனில், இது மனித நேயம் மிக்க உள்ளம் கொண்டவரால் மட்டும் தான் நடிக்க முடியும்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

author-image
WebDesk
New Update
Lal salaam.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘லால் சலாம்’.  ரஜினிகாந்த் மூத்த மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை இயக்கி உள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.எஸ் ரவிக்குமார், ஜீவிதா ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது, படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் பகுதியில் நடைபெற்றது. 

விழாவில் பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  கூறுகையில், இது ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம். 'லால் சலாம்' படம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

தொடர்ந்து, அப்பாவ சங்கின்னு சொல்லும்போது கோபம் வரும். இப்ப சொல்றேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது. அப்படி இருந்திருந்தா அவர் லால் சலாம் படத்துல நடிச்சு இருக்க முடியாது. ஏனெனில், இது மனித நேயம் மிக்க உள்ளம் கொண்டவரால் மட்டும் தான் நடிக்க முடியும் என்று கூறினார். 

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Superstar Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: