Advertisment
Presenting Partner
Desktop GIF

ரஜினிகாந்த் நடித்தும் வீழ்ச்சிப் பாதையில் லால் சலாம் : 3-வது நாள் வசூல் நிலவரம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் முக்கிய கேரக்டரில் நடித்த லால் சலாம் 3-வது நாளில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

author-image
WebDesk
New Update
lal salaam rajini VVV

லால் சலாம் போஸ்டர்

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம் 3-வது நாளில் வசூலில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

2012-ம் வெளியான 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். 9 ஆண்டுகள் இடைவேளிக்கு பிறகு தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு முழுநீள கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார்.

மேலும் நிரோஷா, ஜீவிதா, செந்தில் தம்பி ராமையா, கே.எஸ்.ரவிக்குமார், உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை லைகா நிறுவனம தயாரித்திருந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினிகாந்த் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும், இது ரஜினிகாந்த படம் தான் என்று விளம்பரங்கள் வந்ததால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 9-ந் தேதி வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ரஜனிகாந்த் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றது. அதே சமயம் லால் சலாம் பாக்ஸ் ஆபிஸில் முதல் ஞாயிற்றுக்கிழமை திரையரங்குகளில் வசூலை ஈட்ட முடியாமல் திணறியுள்ளது. இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க்கின் ஆரம்ப மதிப்பீடுகளின்படி ரூ.80-90 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், ஞாயிற்றுக்கிழமை ரூ.3 கோடி வசூலித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக லால் சலாம் படம் தினசரி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மேலும் சரிவை சந்தித்துள்ளது. இன்னும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், சனிக்கிழமையை விட (ரூ 3.25 கோடி) ஞாயிற்றுக்கிழமைக்கான வசூல் குறைவாக உள்ளது. இதன் மூலம் படத்தின் வசூல் மீண்டும் உயர வாய்ப்பே இல்லை என்பது தெரியவருகிறது. ரஜினிகாந்த் நடித்துள்ளதால், படத்தின் முதல் நாள் வசூல் எதிர்பார்ப்புகளை விட குறைவாக (3.55 கோடி) இருந்தது.

தற்போது வரை லால் சலாம் படம் மொத்தமாக 9.8 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. சமீப காலங்களில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஒரு படத்தின் மோசமான பாக்ஸ் ஆபிஸ் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. அவரது ஜெயிலர் (2023) வெளியான முதல் நாளில் ரூ.56.6 கோடி வசூலித்த நிலையில், அண்ணாத்தே (2021), தர்பார் (2020), பேட்ட (2019) மற்றும் 2.0 (2018) ஆகிய படங்கள் ரூ.29.9 கோடி, ரூ.30.80 கோடி, ரூ.19 கோடி மற்றும் ரூ.60.25 கோடி வசூலித்துள்ளன.

கிரிக்கெட் விளையாட்டை சார்ந்த படமாக ப்ரமோட் செய்யப்பட்ட லால் சலாம் படம், முக்கியமாக அரசியல் கருப்பொருள்களுக்காக கவனத்தை ஈர்த்துள்ளது, சாதி ஒடுக்குமுறை மற்றும் மத பாகுபாடு போன்ற பிரச்சினைகளைத் தொடுகிறது. படத்தைப் பற்றிய தனது மதிப்பாய்வில், தி இந்தியன் எக்ஸ்பிரஸின் கிருபாகர் புருஷோத்தமன் படத்திற்கு இரண்டரை ஸ்டார் கொடுத்திருந்தார். மேலும் இயக்குனர் ஒரு சிறப்பான கதையையும் ரஜினிகாந்த் ஒரு சாதாரணமான படத்தில் நடித்ததையும் வீணடித்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Superstar Rajinikanth Aishwarya rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment