Advertisment

கேமியோ ரோலில் வந்த ரஜினி மேஜிக்... 'லால் சலாம்' படம் எப்படி இருக்கு?: திரை விமர்சனம்

மாஸ் இன்ட்ரோ, மெர்சில்லான பி.ஜி.எம், கூர்மையான வசனங்கள் என ரஜினி வரும் ஒவ்வொரு காட்சியும் கொண்டாட வைக்கிறது. கேமியோ என்று சொல்லப்பட்டாலும் படம் முழுவதும் ரஜினியின் ராஜ்ஜியம் தான்.

author-image
WebDesk
New Update
Lal Salaam movie review in tamil

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றம், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் 'லால் சலாம்' படம் திரை விமர்சனம்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நவீன் சரவணன்

Advertisment

 

 Lal Salaam Tamil Movie Review: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோருடன் இணைந்து ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரமாண்டமாக வெளியாகியிருக்கிறது "லால் சலாம்". படம். எப்படி உள்ளது? என்பதை இந்த விமர்சனத்தில் விரிவாக காணலாம். 

கதைக்களம் 

முஸ்லிம்களும் இந்துக்களும் எந்த பிரிவும் இன்றி நட்பாக முரார்பாத் என்ற கிராமத்தில் வசித்து வருவது போல படம் தொடங்குகிறது. அந்தக் கிராமத்தில் இருந்து இளம் வயதிலேயே மும்பை சென்று அங்கு பெரிய தொழிலதிபராக வலம் வரும் மொய்தீன் பாய் (ரஜினிகாந்த்) மகன் சம்சுதீனுக்கும்  (விக்ராந்த்), மொய்தீன் பாயின் நெருங்கிய நண்பரின் மகன் திருவுக்கும் (விஷ்ணு விஷால்) சிறுவயது முதலே சண்டை ஏற்படுகிறது. 

இந்நிலையில், 3 ஸ்டார் கிரிக்கெட் அணியில் வெற்றிகரமாக விளையாடி வரும் விஷ்ணு விஷால் இன்னொரு டீமில் சேர்ந்து விடுகிறார். அதன் பிறகு 3ஸ்டார் டீம் தொடர் தோல்விகளை சந்திக்க, அந்த அணியை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதற்காக விக்ராந்த் அந்த அணியில் இணைகிறார். கிரிக்கெட் போட்டியில் ஏற்படும் சிறு மோதல் இந்து - முஸ்லிம் மக்களிடையே மிகப்பெரிய கலவரமாக வெடிக்கிறது. 

இதனைத் தொடர்ந்து கிராமத்தில் தேர்த் திருவிழா நடத்த இந்து மக்கள் முடிவு செய்யும்போது ஓர் அரசியல் கட்சியின் சதியால் திருவிழா தடுக்கப்படுகிறது. இந்த பிரச்சனையை மொய்தீன் பாய் எப்படி சரி செய்கிறார் ? என்பதே மீதி கதை

நடிகர்களின் நடிப்பு

தெறிக்கும் வசனங்கள், அதிரடி சண்டை காட்சிகள், அங்கங்கே நகைச்சுவை என தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் ரசிகர்களை சுண்டி இழுக்கிறார் சூப்பர்ஸ்டார். கேமியோ ரோல் தான் என்றாலும் ரஜினியை காட்டிகொன்டே இருங்கள்! என ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் அளவிற்கு திரையில் மேஜிக் செய்கிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவருக்குமே குறிப்பிடத்தகுந்த ரோல் அதை சிறப்பாக செய்துள்ளனர். தம்பி ராமையா, செந்தில், அனந்திகா, தன்யா, ஜீவிதா, தங்கதுரை, விவேக் பிரசன்னா, மூணாறு ரமேஷ் என அனைவரின் நடிப்பும் படத்திற்கு உதவியுள்ளது.

இயக்கம் - இசை 

இன்றைய காலகட்டத்தில் விளையாட்டுடன் மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி படமெடுத்திருக்கும் ஐஸ்வர்யாவின் தைரியத்திற்கு பெரிய பாராட்டுக்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் மிரட்டலான இசை ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக ரஜினியின் பி.ஜி.எம் எல்லாம் வேற லெவல் எனலாம். 

படம் எப்படி இருக்கு?

முதல் பாதி முழுவதும் கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்கையை பற்றியும், விஷ்ணு விஷால் - விக்ராந்த் இடையிலான பிரச்சினை பற்றியும், விளையாட்டில் மக்களிடையே ஏற்படும் வெறுப்புணர்வு மெல்ல எப்படி ஒரு கிராமத்தையே பாதிக்கிறது உள்ளிட்ட விஷயங்களை நான்-லீனியர் முறையில் சொல்லி இருக்கிறார்கள். சற்று தொய்வான முதல் பாதி தான் என்றாலும், ரஜினியின் வருகைக்கு பிறகு திரைக்கதை சூடு பிடிக்கிறது. 

மாஸ் இன்ட்ரோ, மெர்சில்லான பி.ஜி.எம், கூர்மையான வசனங்கள் என ரஜினி வரும் ஒவ்வொரு காட்சியும் நம்மை கொண்டாட வைக்கிறது. கேமியோ என்று சொல்லப்பட்டாலும் படம் முழுவதும் ரஜினியின் ராஜ்ஜியம் தான். மத நல்லிணக்கத்தை பற்றி ரஜினி பேசும் வசனங்கள் பெரும் அளவு வரவேற்பை பெறுகிறது. 

ஸ்போர்ட்ஸ் படம் என்று சொல்லப்பட்டாலும் படத்தில் மிகச் சிறிய அளவே கிரிக்கெட் காட்சிகள் இடம்பெறுகின்றன. அதுவும் எந்தவித சுவாரசியமும் இல்லாமல் இருப்பது பெரிய மைனஸ். படத்தின் எடிட்டிங்கில் பெரிய குழப்பம், காட்சிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் செல்கிறது. படத்தில் பல இடங்களில் எமோஷனல் காட்சிகளும், சமூக கருத்தும் நன்றாக கைகொடுத்துள்ளது.

இப்படி பல ஏற்ற இறக்கங்களுடன் படம் சென்றாலும், ரஜினி என்ற ஒற்றை திரை ஆளுமை அவற்றையெல்லாம் மறக்கடிக்க செய்து சமூக கருத்துடன் கூடிய ஒரு நல்ல படத்தை பார்த்த உணர்வை தருகிறது "லால் சலாம்". 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Movie Review
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment