Lara Dutta unrecognisable as Indira Gandhi in BellBottom trailer : ஒரு கதாப்பாத்திரத்தில் தன்னை முழுமையாக ஒப்புவிக்கும் கலைஞனை இந்த திரை உலகம் என்று கொண்டாடிக் கொண்டே இருக்கும். நடிப்பில் சிலர் அசத்துவார்கள். சிலர் தங்களின் சிகை, முக அலங்காரங்களை முற்றிலுமாக மாற்றி புது அவதாரத்தில் பிறந்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்கள். இப்படியான ஒப்பற்ற கலைஞர்கள் இந்திய சினிமாவில் இருக்கிறார்கள். அந்த பட்டியலில் என்றும் நடிகர் கமலுக்கு ஒரு சிறப்பான இடம் இருக்கும். அவருடன் போட்டிக்கு போட்டியாக எத்தனையோ பேர் நடிக்க வந்தாலும் கமல் ஹாசன் சிம்ம சொப்பனம்.
இந்த வரிசையில் தற்போது தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் பிரபஞ்ச அழகி லாரா தத்தா. தன்னுடைய நடிப்பில் உருவாகியுள்ள பெல் பாட்டம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், இந்த ட்ரெய்லரில் நான் இருக்கின்றேன், யாராலும் கண்டு பிடிக்க முடிகின்றதா என்ற கேள்வியை எழுப்புகிறார். ஆனால் பதில் ஏதும் இல்லை.
ட்ரெய்லரில், 1984ம் ஆண்டு, மறைந்த பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியின் போது நடந்த ஒரு விமான கடத்தல் முயற்சியை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் அக்ஷய் குமார், வாணி கபூர், ஹூமா குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். லாரா எங்கே நடித்திருக்கிறார் என்று பலரும் குழப்பத்தில் விழித்த வண்ணம் இருக்க, இந்திரா காந்தியாக நடித்திருப்பது நான் தான் என்று அவர் கூறி ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ட்ரெய்லரை பார்த்தால் இந்திரா காந்தியே நடித்திருப்பது போல் தான் இருக்கிறது. உங்களுக்கு சந்தேகம் என்றால், நீங்களும் செக் செஞ்சு பாத்துக்கங்க.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil